வசந்தசேனா வசந்தசேனா என்ற பாடலில் ரொம்பவே அழகாக, அப்பாவியாக இருப்பார் நடிகை ஸ்ருதிகா. ஒருசில படங்களுக்குப் பின்னர் திரைக்கு முழுக்குப் போட்டார் நடிகை ஸ்ருதிகா. 


குக் வித் கோமாளி..


ஆனால் அவருக்கு மிகப்பெரிய கம்பேக்காக அமைந்துள்ளது விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோ. அந்த ஷோவில் யார் கோமாளி என்று கண்டுபிடிக்கத் திணறும் அளவுக்கு சில நேரங்களில் கோமாளித் தனத்தால் ரகளை செய்வார் ஸ்ருதிகா. ஸ்ருதிகாவின் வெகுளித்தனத்திற்காகவே அவருக்கு ஒரு ஆர்மி உருவாகியுள்ளது. அந்த ஆர்மி அவரைக் கொண்டாடி வருகிறது. ஸ்ருதிகா ஒரு வளர்ந்த குழந்தை என்றே அவரது ஆர்மி ஆட்கள் அவரைக் கொண்டாடுகின்றனர்.


டீச்சிங் தான் பிடிக்கும்:


ஸ்ருதிகா நடிப்பில் கெட்டியோ இல்லையோ படிப்பில் கெட்டி. சென்னை எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் படித்த அவர் மேலாண்மை பாடத்தில் கோல்ட் மெடலிஸ்ட்டாக ஒளிர்ந்தார். அதன் பின்னர் அங்கேயே அவர் பேராசிரியாகவும் பணியாற்றினார். பணிக்குப் பின் அர்ஜூன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பின்னர் மகன் ஆராவை வளர்ப்பதில் கவனம் செலுத்தினார். கல்வி, பணி, கல்யாணம், குழந்தை என 17 வயது தொடங்கி 10 வருடங்கள் பரபரப்பாக இயங்கியுள்ளார் ஸ்ருதிகா.




அப்புறம் என்னாச்சுனா?


மகனை 5 வயது வரைக்கும் டெடிகேட்டடாக வளர்த்த பின்னர் தான் ஸ்ருதிகாவுக்கு திடீரென பிசினஸ் எண்ணம் வந்துள்ளது. அழகைப் பேண ஸ்ருதிகா எப்போதுமே ஹெர்பல் ப்ராடக்ட்ஸ் தான் யூஸ் பண்ணுவாராம். அப்படி அவர் யூஸ் பண்ணப்பண்ண ஏன் நாமும் இவற்றைத் தயாரிக்கக் கூடாது என்ற எண்ணம் அவருக்கு வந்துள்ளது. அவர் சில அழகு சாதன க்ரீம்களை தயார் செய்து கொடுத்துள்ளார். அதை முதலில் தனது தோழிகளுக்கு கொடுக்க அவர்கள் மூலம் அது மற்றவர்களுக்கும் சென்று சேர ஒரு சங்கிலி விளைவு போல் அவரது பிசினஸ் பெருகியுள்ளது.


நான் சோசியல் மீடியாவில் வீக்:


தனது பிசினஸ் டேக் ஆஃப் ஆனது குறித்து ஸ்ருதிகா கூறுகையில் நான் ஹேப்பி ஹெர்ப்ஸ் ப்ராடக்ட்ஸ் இவ்வளவு பெரிதாக ஒர்க் அவுட் ஆகும் என்று நினைக்கவே இல்லை. ஆனால் அது பிரமாண்டமாக ஒர்க் அவுட் ஆனது. எனது க்ளையன்ட்கள் தான் எல்லாவற்றிற்கும் காரணம். அவர்கள் அனுப்பும் ஃபீட் பேக்கை நான் ஸ்க்ரீஷாட் எடுத்து அனுப்புவேன். அப்படித்தான் என் ப்ராடக்ட்ஸ் மீது மக்களுக்கு நம்பிக்கை வந்தது. இப்போது எனது ப்ராடக்ட்ஸுக்கு வெளிநாட்டிலும் வரவேற்பு உள்ளது. இங்கிருந்து வாங்கிச் சென்ற சிலர் மீண்டும் மீண்டும் அதைக் கேட்கின்றனர். அதனால் நான் இப்போது என் ப்ராடக்ட்ஸுக்கு எக்ஸ்போர்ட் லைசன்ஸ் பெற முயற்சித்து வருகிறேன். என்னை வளர்த்தது, வளர்ப்பது என் க்ளையன்ட்ஸ் தான். இரண்டரை வருடங்கள் ஆகிவிட்டது இந்தத் தொழிலை ஆரம்பித்து. இப்போது 8 ப்ராடக்ட்ஸ் உள்ளது.