தமிழில் ஒளிப்பரப்பப்படும் ரியாலிட்டி ஷோக்களில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கும் மக்களிடம் கிடைத்த வரவேற்பு, அந்த நிகழ்ச்சியை அடுத்தடுத்த சீசன்களுக்கு கொண்டு சென்றது. அண்மையில் இதன் 5 ஆவது சீசன் முடிவடைந்த நிலையில் அதன் டைட்டில் வின்னராக ராஜூ தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனைத்தொடர்ந்து ஓடிடி யில் 24 மணி நேரமும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிப்பரப்பப்படும் என்றும் அதில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முந்தைய சீசன்களில் பங்குபெற்று தோல்வியுற்ற போட்டியாளர்கள் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டது. 


 இறுதிப்போட்டி


பிக்பாஸ் அல்மேட் என்ற பெயரில் ஒளிப்பரப்பட்ட இந்த நிகழ்ச்சியான 70 நாட்கள் நடத்தப்படும் என சொல்லப்பட்ட நிலையில், இந்த நிகழ்ச்சியில் சினேகன், பாலாஜி, சினேகன், அனிதா சம்பத், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். முதலில் இந்த நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்கி வந்த நிலையில், விக்ரம் பட ஷூட்டிங்கை காரணம் காட்டி அவர் அதில் இருந்து விலகினார். அதனைத்தொடர்ந்து பிரபல நடிகர் சிலம்பரசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நிலையில், இந்த நிகழ்ச்சி தற்போது அதன் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. இறுதிபோட்டிக்கு  தாமரை, ரம்யா பாண்டியன், நிரூப், பாலா ஆகியோர் போட்டியாளர்களாக உள்ள நிலையில், போட்டியின் ஃபைனல் இன்று நடக்கிறது. 


 






முன்னாள் போட்டியாளர்கள் அனைவரும் இதில் கலந்து கொண்டுள்ளனர். இது தவிர யாஷிகாவின் ஸ்பெஷல் டான்ஸூம் இருக்கிறதாம். அத்தோடு சிலம்பரசனின் முன்னாள் காதலியான ஹன்சிகாவும் இதில் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹன்சிகாவும், சிம்புவும் இணைந்து நடித்த மஹா திரைப்படம் வரும் 28 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் ப்ரோமோஷனுக்காகவே ஹன்சிகா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வரவுள்ளதாக கூறப்படுகிறது அத்தோடு பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் யார் என்பது குறித்தான தகவலும் வெளியாகியுள்ளது. அதன்படி பிக்பாஸ் டைட்டில் வின்னராக பாலா வெல்ல அதிக வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.