ஆமீர் கானின் புதிய காதலி


நடிகர் ஆமீர் கான் இன்று தனது புதிய காதலியை பத்திரிகையாளர் முன்பு அறிமுகம் செய்து அனைவருக்கு ஷாக் கொடுத்துள்ளார். தனது காதலியை தனது நெருங்கிய திரைத்துறை நண்பர்களான ஷாருக் கான் மற்றும் சல்மான் கானுக்கு அவர் அறிமுகம் செய்துள்ளார். ஆமீர் கானின் புதிய காதலி கவுரி ஸ்ப்ராட் குறித்த பல கேள்விகள் இணையத்தில் எழுந்துள்ளன. யார் இந்த கெளர் ஸ்ப்ராட் . கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தனது காதலை எப்படி ஆமீர் கானால் ஊடகத்தில் இருந்து மறைத்து வைக்க முடிந்தது என்பதைப் பார்க்கலாம்


யார் இந்த கெளரி ஸ்ப்ராட்


கவுரியின் தாயார் தமிழ்நாட்டைச் சேர்ந்தவராம். அவரது தந்தை ஐரிஷ் குடும்பத்தைச் சேர்ந்தவர் எனவும், அவரது தாத்தா சுதந்திரப் போராட்ட வீரர் என்றும் கூறப்படுகிறது. கவுரியின் அம்மா பெங்களூரில் சலோன் ஒன்றை வைத்து நடத்தியுள்ளார். கவுரி தனது பள்ளி படிப்பை பெங்களூரில் முடித்து  பின் லண்டனில் புகைப்படம் மற்றும் ஃபேஷன் ஸ்டைலிங் படித்துள்ளார். தற்போது மும்பையில் சொந்தமாக சலோன் வைத்து நடத்தி வருகிறார். அவருக்கு ஆறு வயது மகன் இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது அவர் அமீர் கானின் தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார் என ஆமீர்கான் தெரிவித்தார். 


காதலை மறைத்து வைத்தது எப்படி


ஆமீர் கான் பெண் ஒருவருடன் காதல் உறவில் இருந்து வருவதாக அவ்வப்போது தகவல்கள் வெளியானாலும் இதுபற்றி ஆதாரப்பூர்வமான தகவல்கள் கிடைக்கவில்லை. தனது காதலை ஊடகத்தில் இருந்து மறைத்து வைக்க சாமர்த்தியமாக செயல்பட்டுள்ளார் ஆமீர் கான் .கவுரி பெங்களூரில் வசித்து வந்த நிலையில் ஆமிர் கான் அவரை சந்தித்த பயணித்துள்ளார். மும்பையைக் காட்டிலும் பெங்களூரில் ஊடக கவனம் குறைவு என்பதால் இது பெரியளவில் வெளியே தெரியவில்லை என ஆமீர் கான் தெரிவித்துள்ளார். மேலும் மும்பையில் தனது வீட்டின் மேல் பத்திரிகையாளர்களின் கவனம் குறைவு என்றும் அவர் தெரிவித்தார்.