இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் பிப்ரவரி 21ஆம் தேதி திரைக்கு வந்த படம் தான் டிராகன். ஸ்கூல், காலேஜ், வேலை, காதல் வாழ்க்கை என்று எல்லாவற்றையும் நகைச்சுவை உணர்வோடு கொடுத்த படம் தான் டிராகன். இந்தப் படத்தில் பிரதீப் உடன் இணைந்து அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோகர், மிஷ்கின், கேஎஸ் ரவிக்குமார், ஜார்ஜ் மரியன் ஆகியோர் நடித்திருந்தனர். இவர்களுடன் இணைந்து சிறப்பு தோற்றத்தில் சினேகா, இவானா, அஸ்வத் மாரிமுத்து, தீபா சங்கர் ஆகியோர் பலர் நடித்திருந்தனர்.


ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்த இந்தப் படத்தை ரூ.37 கோடி பட்ஜெட்டில் உருவாக்கி இருந்தது. லியோன் ஜேம்ஸ் படத்திற்கு இசையமைத்திருந்தார். கடந்த பிப்ரவரி 21 ஆம் தேதி திரைக்கு வந்த இந்தப் படம் இதுவரையில் ரூ.138 கோடி வரையில் வசூல் செய்துள்ளதாக. இந்தப் படம் பிரதீப் ரங்கநாதனின் 2ஆவது படம். அவரது நடிப்பில் வந்த 2 படங்களுமே ரூ.100 கோடிக்கும் அதிகமாகவே வசூல் குவித்து சாதனை படங்களாக அமைத்துள்ளது. 




இதற்கு முன்னதாக வெளியான 'லவ் டுடே' ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூ குவித்தது. இப்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் டிராகன் படம் ரூ.138 கோடி வசூல் குவித்திருக்கிறது.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் 'டிராகன்' வெளியானது. இந்த வசூல் மூலம், எந்த ஒரு புதுமுக நடிகரும் படைக்காத சாதனையை பிரதீப் ரங்கநாதன் தனது 2 படங்களிலும் படைத்துவிட்டார். அதாவது, இந்திய சினிமா வரலாற்றில் தனது அடுத்தடுத்த 2 படங்களிலும் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் குவித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் பிரதீப் ரங்கநாதன். விஜய்க்கு பிறகு சிவகார்த்திகேயன் வந்த நிலையில் இப்போது சிவகார்த்திகேயனுக்கு பிறகு அவரது இடத்திற்கு பிரதீப் ரங்கநாதன் வந்துவிட்டார் என்று பேச்சுகள் அடிப்பட துவங்கி இருக்கிறது.




வசூலுடன் ஒப்பிடும் போது 'டிராகன்' அஜித்தின் விடாமுயற்சி பட வசூல் சாதனையை முறியடித்துவிட்டதாக கூறப்படுத்திகிறது. கடந்த பிப்ரவரி 6 ஆம் தேதி வெளியான 'விடாமுயற்சி' படம் கலவையான விமர்சனங்களை எதிர்கொண்ட நிலையில், தற்போது வரை ரூ.137 கோடி வசூல் செய்திருந்தது. இந்த சாதனையை தான் பிரதீப் ரங்கநாதனின் டிராகன் படம் முறியடித்துள்ளது.