நடிகர் நாகர்ஜூனா மனதில் உள்ளதை போட்டுடைத்து பேசிவிடுவார். அவர் குறித்தான கிசுகிசுக்களுக்கு பட்டென பதிலளித்து விடுவதே அவரது வழக்கமும் கூட. இந்த வெளிப்படையான பேச்சு சில நேரங்களில் சர்ச்சைகளுக்கும் வித்திடும். சில நேரங்களில் சிரிப்பலையை ஏற்படுத்தும். அந்த வகையில் 2017ல் நடந்த ஒரு சம்பவம் குறித்து நாகர்ஜூனா இப்போது நினைவுகளை பகிர்ந்துள்ளார். நாகர்ஜூனாவின் மகனான நாக சைதன்யாவுக்கும், நடிகை அனுஷ்காவுக்கும் இடையே நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக அப்போது தகவல் காட்டுத்தீயாக பரவியது. அந்தக்கணத்தில் இருவருமே ஸ்விட்சர்லாந்தில் படப்பிடிப்பில் இருந்தனர்.
இது குறித்து அப்போதே நாகர்ஜூனாவிடம் கேட்கப்பட்டது. அப்போது பதிலளித்த அவர் நிச்சயதார்த்த செய்தி என் காதுக்கு வந்ததுமே நான் நாகசைதன்யாவுக்கு போன் செய்துவிட்டேன் என தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அப்போது நாகசைதன்யாவிடம் என்ன பேசினார் என்பது குறித்து தற்போது நினைவுகளை பகிர்ந்துள்ளார் நாகர்ஜூனா.
ஹைதராபாத் டைம்ஸ்க்கு பேசிய நாகர்ஜூனா, ஆமா. அந்த நிச்சயதார்த்த செய்தி கேட்டதும் நான் உடனே போன் செய்தேன். நாகசைதன்யா அப்போது ஸ்விட்சர்லாந்தில் இருந்தார். நான் விடியற்காலையே போன் செய்தேன். ஏய்.. நேற்று உனக்கும் அனுஷ்காவுக்கும் நிச்சயதார்த்தமாமே என்னிடம் கூட சொல்லவில்லை என்றேன் நக்கலாக. அதற்கு வோ.. உண்மையாகவா எனக் கூறி அவன் விழுந்து விழுந்து சிரித்தான். நான் அனுஷ்காவிடமும் இது குறித்து பேசி சிரித்தேன். அவரும் கலகலவென சிரித்தார். இந்த வதந்தி எங்கிருந்து தொடங்கப்பட்டது என எங்களுக்கு தெரியவே இல்லை. ஏதோ ஒரு தயாரிப்பாளர் கிளப்பிவிட்ட வதந்தி என நினைத்துகொண்டோம் எனத் தெரிவித்தார்.
முன்னதாக நாகர்ஜூனாவே பல வதந்திகளில் சிக்கியுள்ளா. அனுஷ்கா, சார்மி உள்ளிட்டோர் நாகர்ஜூனாவின் காதல் வதந்திகளில் சிக்கியவர்கள். நாகர்ஜூனா நடிகை அமலாவை திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.