Bigg Boss 5 Tamil Day 47: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் நாடியா, அபிஷேக், சின்னப்பொண்ணுவை அடுத்து நான்காவதாக ஸ்ருதி எலிமினேட் செய்யப்பட்டார். இந்நிலையில், நவம்பர் 14-ம் தேதி ஒளிபரப்பான எபிசோடில் மதுமிதா எலிமினேட் செய்யப்பட்டார்.


இந்த வாரத்தின் முதல் நாளன்று தலைவர் போட்டிக்கான விளையாட்டும் நாமினேஷனும் நடைபெற்றது. ப்ரியங்கா தலைவராக தேர்வு செய்யப்பட, ஐக்கி, பாவனி, சிபி, நிரூப், இமான், அக்‌ஷரா, இசைவாணி மற்றும் அபினய் ஆகியோர் நாமினேஷன் பட்டியலில் இடம்பிடித்தனர். இந்நிலையில், ’உள்ளதை உள்ளபடி காட்டும் கண்ணாடி’ டாஸ்க்கின் மூன்றாவது நாள் போட்டி இன்றும் தொடர்கிறது. இன்றைய எபிசோடில், தாமரை - இசைவாணி, நிரூப் - வருண் ஆகியோருக்கு இடையே மோதல் ஏற்பட்டது.


மிகவும் வெளிப்படையாக பேசுவதாக என்ணி, வருண் நிரூப் மீதிருக்கும் வெறுப்பை கொட்டி தீர்த்துவிட்டார். இதற்கு பெரிதாக ரியாக்ட் செய்யாமல் அமைதியாக கடந்துபோகும் நிரூப், நேரம் கிடைக்கும்போது சம்பவம் செய்யலாம் என நினைக்கிறார் போல. அதே போல, அடுத்து பாவனி பற்றி பேசிய அக்‌ஷராவும் நெகட்டீவாகவே சொன்னார். ஆனால், இந்த இரண்டு கண்ணாடி பேச்சுகளைவிட கடைசியாக தாமரைச் செல்வி பேசியதுதான் ஹைலைட். இசைவாணியைப் பற்றிய தாமரை, இசையின் நிறை குறைகளை எடுத்து  சொன்னது எதிர்மறையாக முடிந்தது. அவரது கருத்துகளுக்காக கடுப்பான இசை, போட்டி முடிந்தபின் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால், மீண்டும் பிக் பாஸ் வீட்டில் சலசலப்பு ஏற்பட்டது. 


இறுதியில் பலூன் டாஸ்க் வைக்கப்பட்டு, நிரூப் - வருண், பாவனி - அக்‌ஷராவை மோதவிட்டு வேடிக்கை பார்த்தார் பிக் பாஸ். இதில் பாவனியும்,வருணும் வெற்றி பெற்றனர்.


 


ப்ரொமோ:3


















ப்ரொமோ:2


















ப்ரொமோ:1



































































































மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண