பாலிவுட்டின் பிரபல இயக்குநர் கரண் ஜோஹரின்   ‘காஃபி வித் கரண்’(Koffee with Karan) மிகவும் பிரபலமானது. சினிமா பிரபலங்களின் பர்சனல் பக்கங்கள் தொடர்பான ரூமர்ஸ் , அந்தரங்க விஷயங்களை கரண் ஜோகர் வெளிப்படையாக கேட்டு விடுவதும் அதற்கு பிரபலங்கள் கொடுக்கும் பதில்களும்தான் ஷோவின் வெற்றிக்கு காரணம்.இந்த நிகழ்ச்சியின் 7 சீசன் தற்போது தொடங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியின்  9 ஆவது எபிசோடில் பாலிவுட் பிரபல நடிகர்களான டைகர் ஷெராப் மற்றும் கிருத்தி சனோன் ஆகியோர் பங்கேற்றனர். அப்போது பேசிய டைகர் ஷெராப்,  ‘ஹீரோ பந்தி 2’ படம்  ஃப்ளாப் ஆனது, திஷா பதானியுடனான உறவு என பலவை குறித்து பேசியிருக்கிறார்.   




 


திஷா பதானியுடனான கேள்விக்கு பதிலளித்த டைகர், “ நாங்கள் எப்போதும் போல நல்ல நண்பர்கள்” என்றார். உடனே அவரை இடைமறித்த கரண், “யாருமே உங்கள் இருவரையும் அப்படி சொல்லவில்லையே.. நீங்கள் எல்லா ஞாயிற்றுகிழமையும் ஒரு குறிப்பிட்ட ரெஸ்டாரன்ட்டில் சந்தித்து கொள்கிறீர்களே.. இது உங்கள் வழக்கமா  என்று கேட்க,   “நாங்கள் இருவரும் ஒரே உணவை உண்போம்” என்று பேசினார். 


 






  ‘ஹீரோ பந்தி 2’ படம்  ஃப்ளாப் ஆனது குறித்து அவர் பேசும் போது, “ எனது இதயம் உடைந்து விட்டது. நான் மன அழுத்தத்திற்கு உள்ளானேன். நான் அதிகமாக உணர்ச்சி வசப்பட கூடியவன்தான். எனக்கு சமூகத்தோடு பெரிதாக இணைந்து இருப்பதில்லை. எனக்கு பெரிதாக நண்பர்களும் கிடையாது. நான் ஒரு குறிப்பிட்ட எமோஷனுக்குள்ளே சுற்றி வந்து கொண்டே இருப்பேன். இதைக்கேட்ட நடிகை கிருத்தி சனோன்  ‘கன்பாத்’ ஷூட்டிங்கின் போது கூட இதை டைகர் ஷெராப் காட்டிக்கொள்ளவே இல்லை. டைகர் மாஸ்கை நன்றாகவே பயன்படுத்துகிறார்” என்று பேசினார். மேலும் பேசிய டைகர் நான் நல்ல நடிகர், நல்ல வேலை போன்ற பெயர்களுக்கான நபர் இல்லை. நான் பாக்ஸ் ஆபிஸூக்கான நபர். நான் அந்த விசில்களில் இருந்தும், அந்த நிலத்தில் இருந்தும் வந்தவன்” என்று பேசியிருக்கிறார்.