தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா.நட்சத்திர அந்தஸ்து மிக்க அனைத்து நடிகர்களுடனும் நயன்தாரா ஜோடியாக நடித்துவிட்டார். தவிற சோலோ ஹீரோயினாக களமிறங்கி தனித்துவமிக்க, பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளில் நடித்து வருகிறார். மேலும் தனது நெருங்கிய நண்பரான விக்னேஷ் சிவனுடன் இணைந்து , “ரௌடி பிக்சர்ஸ் “ என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் காதலித்து வருவதாக கூறப்படுகிறது.சமூக வலைத்தள பக்கங்களில் ஆக்டிவாக இல்லாத நயன்தாராவின்  புகைப்படங்கள் மற்றும் அவரின் செயல்பாடுகள் குறித்த தகவல்களை விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தள பக்கங்களில் தெரிவித்து வருகிறார். விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற வலைத்தள பக்கங்களில் செம ஆக்டிவ். இந்நிலையில் ரசிகர்களுடனான உரையாடல் ஒன்றை இன்ஸ்டாகிராம் ஸ்டோரி வாயிலாக நிகழ்த்தினார் விக்கி. அப்போது ரசிகர் ஒருவர் சென்னையில் உங்களுக்கு பிடித்த இடம் எது என கேட்க , அது அனிருத் சாரின் ஸ்டூடியோதான் என பதிலளித்துள்ளார். தெலுங்கு திரைப்படம் ஒன்றை நீங்கள் இயக்கினால் , கதாநாயகியாக யாரை தேர்வு செய்வீர்கள் என ஒருவர் கேட்க, “என்னை யார் தேர்வு செய்கிறார்களோ , அவர்களைத்தான் “ என தெரிவித்துள்ளார். அதேபோல மற்றொரு நபர் நயன்தாராவிடம் நீங்கள் ரசித்த  சிறந்த பண்புகளில் ஒன்றை கூறுங்கள் என கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த விக்னேஷ் சிவன் நயன்தாராவின் புகைப்படம் ஒன்றுடன்  “அவரின் தன்னம்பிக்கைதான்” என பதிலளித்து அதனை தனது ஸ்டோரியில் பகிர்ந்திருந்தார்..



ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என கொண்டாடப்படும் நயன்தாராவிற்கு கோலிவுட், மல்லுவுட், டோலிவுட் என ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் மிலந்த் ராவ் இயக்கத்தில் “நெற்றிக்கண்”, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் “அண்ணாத்த “.  விஜய் சேதுபதியுடன் “ காத்துவாக்குல ரெண்டு காதல் “ உள்ளிட படங்களில் நடித்து வருகிறார். இதில் “நெற்றிக்கண்” திரைப்படத்தை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான “ரௌடி பிக்சர்ஸ்” தயாரிக்கிறது. இந்த படத்தில் நயன் பார்வை குறைபாடு உள்ளவராக நடித்துள்ளார். படம் திரையரங்கில் வெளியாவதற்காக காத்திருந்த நிலையில் , கொரோனா அச்சுருத்தல் காரணமாக தியேட்டர்ஸ் மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட முடிவு செய்திருந்தது படக்குழு



இந்நிலையில் படமானது 20 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 5  கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட  “நெற்றிக்கண் “ திரைப்படம் , 20 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதால் படக்குழு செம குஷியில் உள்ளார்களாம். படமானது ஜூலை மாதம் முதல் வாரத்தில் பிரபல ஒடிடி தளத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.