நடிகர் விஜய்க்கு பிடித்த உணவுகள் குறித்து பட்டியலிட்டுள்ளார் நடிகர் சஞ்சீவ். தமிழ் திரையுலகில் ஸ்டார் நடிகர்களுள் ஒருவரான தளபதி விஜய் இன்று தனது 47-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவரின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று அவருடைய அடுத்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. இது ட்விட்டரில் மிகவும் வைரலானது. அந்த வகையில் இன்று விஜயின் பிறந்தநாள் காரணமாக ட்விட்டரில் "#HBDThalapathyVijay" என்ற ஹேஷ்டேக் தற்போது ட்ரெண்டாக தொடங்கியுள்ளது. 


இந்த ஹேஷ்டேக் பயன்படுத்தி ரசிகர்கள் மட்டுமல்லாமல் பல திரைப் பிரபலங்களும் தளபதி விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.  இசையமைப்பாளர் அனிருத், நடிகர் சதீஷ் உள்ளிட்ட பலரும் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் நடிகர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். 






விஜய்க்கு பிடித்த உணவு:


இந்நிலையில் நடிகர் விஜய்க்குப் பிடித்த உணவு குறித்து பட்டியலிட்டுள்ளார் நடிகர் சஞ்சீவ். நடிகர் சஞ்சீவ் பேசியதாவது; நாங்கள் மொத்தம் ஆறு பேர். அதில் மூவர் கிறிஸ்தவர்கள். விஜய், ஸ்ரீநாத், மனோஜ் ஆகிய மூவரும் கிறிஸ்தவர்கள். ஒவ்வோர் ஆண்டும் நாங்கள் கிறிஸ்துமஸ் தினத்தை ஒன்றாக சேர்ந்து கொண்டாடுவோம். அதில் நிறைய மகிழ்ச்சியும் கொண்டாட்டமும் இருக்கும். அதேபோல் நியூ இயரையும் சேர்ந்து கொண்டாடுவோம். விஜய்க்கு மட்டன் பிரியாணி தான் ரொம்ப பிடிக்கும். இன்று மட்டன் பிரியாணி இருக்கிறது. விஜய் தான் இல்லை. பிரியாணி ரொம்ப நல்லா வேற இருக்கு. விஜய்யை ரொம்ப மிஸ் பண்றேன் என்று குறிப்பிட்டுள்ளார்.




இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


நடிகர் விஜய் தற்போது தெலுங்கு இயக்குநரான வம்சி இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்தப்படத்தின் முதற்கட்ட படிப்பு சென்னையில் நடந்த நிலையில், 2 ஆம் கட்ட படப்பிடிப்பிற்காக கடந்த மாதம் 23 ஆம் தேதி நடிகர் விஜய் ஹைதராபாத்திற்கு சென்றார். அங்கு படப்பிடிப்பு விறுவிறுவென நடந்து வந்த நிலையில் அந்த படப்பிடிப்பு நடந்து முடிந்ததாக படக்குழு அண்மையில் அறிவித்து இருந்தது. 


அந்த 6 நண்பர்களில் முக்கியமானவர்:


நடிகர் விஜய்யின் 6 நண்பர்கள் வட்டாரத்தில் முக்கியமானவர், சஞ்சீவ். சினிமா மற்றும் சீரியல் நடிகராக வலம் வரும் சஞ்சீவ், கல்லூரியில் இருந்து நடிகர் விஜய் உடன் நெருக்கத்தில் உள்ளார். அவர்களது நட்பு, இன்றும் தொடர்ந்து வருகிறது. "எங்கள் வீட்டு அறையில் விஜய் காலாண்டர் ஒன்று இருக்கும். காலையில் எழுந்திருக்கும் போதே நண்பனை பார்த்த தான் சஞ்சீவ் எழுந்திருப்பார். விஜய் ரசிகர் மன்றத்திலிருந்து ஆண்டு தோறும் எங்களுக்கு காலண்டர் வரும். விஜய் அடிக்கடி வீட்டிற்கு வருவார். வாக்கிங் போகும் போதெல்லாம், விஜய் வீட்டிற்கு சஞ்சீவ் போய்விடுவார்.


அடிக்கடி நண்பர்கள் வெளிநாடு செல்வார்கள். கொரோனாவுக்கு முன்பே மாஸ்க் அணிந்து தான் அவர் நண்பர்களுடன் ஊர் சுற்றுவார். அப்போது அது வேற்றுமையாக தெரிந்திருக்கலாம். இனி மாஸ்க் அணிந்து செல்வதில் பிரச்சனை இருக்காது. எப்படி இருந்தாலும் அவரை கண்டுபிடித்துவிடுவார்கள்; இருந்தாலும் ஊதா கலர் மாஸ்க் ஒன்று அவரிடம் உள்ளது. அதை மாட்டிக் கொண்டு, ஆல்டோ காரில் மனிதர் புறப்பட்டு விடுவார்" என்று ஒரு பேட்டியில் கூறிய சஞ்சீவின் மனைவி ப்ரீத்தா அவர்களின் நட்பின் ஆழத்தை விவரித்தார்.