இயக்குநர் சிறுத்தை சிவாவுடன் இயக்கத்தில் நடிகர் சூர்யா இணையும் படம் குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. 


தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக உள்ள நடிகர் சூர்யாவுக்கு கடந்த 2 ஆண்டுகளாகவே தொடர்ந்து வெற்றிப் படங்களாக அமைந்து வருகிறது. முதல் கொரோனா அலையின் போது ஓடிடியில் வெளியான சூரரைப் போற்று, கடந்தாண்டு வெளியான ஜெய் பீம் போன்ற படங்கள் அவரை முன்னணி தயாரிப்பாளராக நிலை நிறுத்தியது. இதனைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரியில் எதற்கும் துணிந்தவன் படம் வெளியாகி கலவையான விமர்சனத்தைப் பெற்றது. 




இதனிடையே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன்,விஜய் சேதுபதி, பஹத் ஃபாசில், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ள விக்ரம் படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே கடந்த ஜூன் 3 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தில் நடிகர் சூர்யா ரோலக்ஸ் என்ற கேரக்டரில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்து அனைவரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். 






இவரே விக்ரம் படத்தின் 3 ஆம் பாகத்திற்கு லீடாக இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் படத்தின் வெற்றியை தொடர்ந்து சூர்யாவுக்கு தான் அணிந்திருந்த  ரோலக்ஸ் வாட்சை கமல்ஹாசன் பரிசளித்தார். இந்த படத்தை தொடர்ந்து நடிகர் மாதவன் இயக்கியுள்ள இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானியும் விண்வெளிப் பொறியாளருமான நம்பி நாராயணன் வாழ்க்கை படமான ராக்கெட்ரி : தி நம்பி எஃபக்ட் என்ற படத்தில் சிறப்பு வேடத்திலும், பாலா இயக்கத்தில் பெயரிடப்படாத படம் ஒன்றிலும் சூர்யா நடித்து வருகிறார். 




இந்நிலையில் இயக்குநர் சிறுத்தை சிவாவுடன் நடிகர் சூர்யா இணையவுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது. ஆனால் படம் குறித்த எந்தவித தகவலும் வெளியாகாததால் ரசிகர்கள் குழப்பமடைந்தனர். இந்நிலையில் பிரபல இணைய ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள பிரபல தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, சூர்யாவை வைத்து அடுத்து ஒரு படம் தயாரிக்கவுள்ளதாக தெரிவித்தார். உடனடியாக நெறியாளர் அது சிறுத்தை சிவா இயக்கும் படமா என கேள்வியெழுப்பினார். 


அதற்கு ஞானவேல் ராஜா அந்த படம் தயாரிப்பில் இருப்பதாகவும், ஆனால் தான் அந்த படத்தை தயாரிக்க வில்லை என்றும் குறிப்பிட்டார். மேலும் ராதே ஷியாம் படத்தை தயாரித்த யுவி கிரியேஷன்ஸ் தான் அப்படத்தை தயாரிக்கவுள்ளதாகவும், படத்தின் பட்ஜெட் மிகப்பெரியது எனவும் ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார். இதனைக் கேள்விப்பட்ட சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண