நாள்: 21.06.2022


நல்ல நேரம் :


காலை 9.30 மணி முதல் காலை 10.30 மணி வரை


மதியம் 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை









காலை 10.30 மணி முதல் காலை 11.30 மணி வரை


மாலை 6.30 மணி முதல் மாலை 7.30 மணி வரை


இராகு :


மதியம் 12 மணி முதல் மதியம் 1.30 மணி வரை


குளிகை :


காலை 10.30 மணி முதல் மதியம் 12 மணி வரை


எமகண்டம் :


காலை 7.30 மணி முதல் காலை 9 மணி வரை


சூலம் –  வடக்கு


மேஷம் :


மேஷ ராசி நேயர்களே, இன்று உங்களுக்கு லாபகரமான நாள் ஆகும். செயல்பாடுகளில் மாற்றம் ஏற்படும். எதிர்பாராத தனவரவு உண்டாகும். வழக்கு தொடர்பான விஷயங்களில் பொறுமையுடன் செயல்படவும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். சிக்கனமாக செலவு செய்து சேமிப்பை மேம்படுத்துவீர்கள். உடனிருப்பவர்களின் பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். வெற்றி நிறைந்த நாள்.


ரிஷபம்:


ரிஷப ராசி நேயர்களே, இந்த நாள் உங்களுக்கு சுகமான நாளாக அமையும். குடும்ப உறுப்பினர்களுடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். நெருக்கமானவர்களின் எண்ணங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். திறமைக்கு உண்டான பாராட்டுகள் கிடைக்கும். சுறுசுறுப்பாக செயல்பட்டு இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். சிறு தூர பயணங்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். அமைதி நிறைந்த நாள்.


மிதுனம் :


மிதுன ராசி நேயர்களே, இந்த நாள் உங்களுக்கு புதிய நட்பு உண்டாகும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வியாபார பணிகளில் பொறுமையை கையாளவும். வாழ்க்கை துணைவருடன் சிறு தூர பயணங்களை மேற்கொள்வீர்கள். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். எதையும் சமாளிக்கக்கூடிய மனப்பக்குவம் உண்டாகும். அதிகார பதவியில் இருப்பவர்களின் அறிமுகமும், ஒத்துழைப்பும் கிடைக்கப் பெறுவீர்கள். முயற்சி நிறைந்த நாள்.


கடகம் :


கடக ராசி நேயர்களே, இந்த நாள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும்.  வியாபார பணிகளில் வேலையாட்களின் ஆதரவு மேம்படும். 


சிம்மம்:


சிம்ம ராசி நேயர்களே, இந்த நாள் உங்களுக்கு வெற்றிகரமான நாள் ஆகும். உத்தியோக பணிகளில் கவனத்துடன் செயல்பட வேண்டும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து நடந்து கொள்ளவும். நிதானம் வேண்டிய நாள்.


கன்னி :


கன்னி ராசி நேயர்களே, கணவன், மனைவிக்கிடையே சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். வர்த்தகம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வியாபார பணிகளில் லாபம் மேம்படும். நன்மை நிறைந்த நாள்.


துலாம் :


துலாம் ராசி நேயர்களே, இந்த நாள் உங்களுக்கு தனவரவு, பணவரவு உண்டாகும். குழந்தைகளை பற்றிய சிந்தனைகள் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். வியாபார பணிகளில் மாற்றமான சிந்தனைகள் உண்டாகும். உத்தியோக மாற்றம் தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். உயர்வு நிறைந்த நாள்.


விருச்சிகம் :


விருச்சிக ராசி நேயர்களே, செயல்பாடுகளில் மாற்றம் ஏற்படும். குடும்ப வருமானத்தை மேம்படுத்துவது தொடர்பான முயற்சிகள் அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங்கள் எதிர்பார்த்த விதத்தில் நிறைவுபெறும். குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் அமையும். இன்பம் நிறைந்த நாள்.


தனுசு :


தனுசு ராசி நேயர்களே, தெளிவான சிந்தனைகள் பிறக்கும். குடும்ப உறுப்பினர்கள் உங்களின் எண்ணங்களை புரிந்து கொள்வார்கள். புதிய வீடு, மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். பயணங்களில் இருந்துவந்த சோர்வு குறையும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.


மகரம் :


மகர ராசி நேயர்களே, கலகலப்பான பேச்சுக்களின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். அக்கம்-பக்கம் இருப்பவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். உங்களின் பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். பத்திரிக்கை தொடர்பான துறைகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். சாதுர்யமான பேச்சுக்களின் மூலம் சாதகமான சூழ்நிலைகளை உருவாக்குவீர்கள். செல்வாக்கு நிறைந்த நாள்.


கும்பம்:


கும்ப ராசி நேயர்களே, நீண்ட நேரம் கண்விழிப்பதை குறைத்துக் கொள்வது நல்லது. இனம்புரியாத சிந்தனைகளின் மூலம் செயல்பாடுகளில் சோர்வு வெளிப்படும். வெளியூர் தொடர்பான பயணங்களை பற்றிய சிந்தனைகள் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். புதிய பொருட்களின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். அசதி குறையும் நாள்.


மீனம்:


மீன ராசி நேயர்களே, நீண்ட நாள் ஆசைகளை நிறைவேற்றி கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். பழைய பிரச்சனைகளை மாறுபட்ட முறையில் சிந்தித்து முடிவெடுப்பீர்கள். விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் பயனற்ற இன்னல்களை தவிர்க்க முடியும். வேலை நிமிர்த்தமான செயல்பாடுகளில் இருந்துவந்த காலதாமதங்கள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். தொல்லைகள் விலகும்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண