யஷ் நடிப்பில் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் கடந்த 14ஆம் தேதி வெளியான திரைப்படம் கே.ஜி.எஃப் 2. கே.ஜி.எஃப் 1 பாகம் ஒன்று ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், அதன் இராண்டாம் பாகமானா இந்தப்படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் படம் அமைந்த நிலையில், கே.ஜி.எஃப் 2 திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கிறது.


இந்நிலையில், கே.ஜி.எஃப் படத்தில் வரும் ‘ராக்கி பாய்’ கதாப்பாத்திரத்திற்கென தனி ரசிகர் பட்டாளம் உருவாகிவிட்டது. ராக்கி பாயின் ஸ்டைல், ராக்கி பாயின் வசனங்கள் என சமூக வலைதளத்தில் டிரெண்டாகி வரும் நிலையில், அக்கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்த யஷ்ஷின் மகள் ராக்கி பாய் பற்றி பேசி இருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை யஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். 


வீடியோவைக் காண:






‘கேஜிஎஃப் 2’ உலகளவில் 1000 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்துள்ளது. இந்தத் தகவலை சினிமா விமர்சகர் ரமேஷ் பாலா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். தங்கல், பாகுபலி 2 மற்றும் ஆர்ஆர்ஆர் திரைப்படத்திற்கு பிறகு 1000 கோடி வசூலித்த நான்காவது இந்திய திரைப்படம் என்ற பெருமையையும் பெற்றது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண