உலகமுழுவதும் உடை வேறுபாடு என்பது முற்றிலும் மாற்றிபோன ஒன்றாக மாறிவிட்டது. அந்த காலத்தில் பெண்கள் இப்படிப்பட்ட உடைகள்தான் அணிய வேண்டும் என்று, ஆண்கள் என்றால் இப்படிப்பட்ட உடைகள்தான் அணிய வேண்டும் என்று வகுக்கப்பட்டது. ஆண்டுகள் பல நாகரித்திற்கு ஏற்ப நகரும்போது, பெண்கள் தங்கள் வாழ்க்கை முறைக்கு ஏற்றாற்போல், ஆண்களுக்கென வகுக்கப்பட்ட உடைகளை உடைத்து தங்களுக்கென மாற்றிக்கொண்டனர். 


இருப்பினும், பெண்கள் இன்றைய காலத்தில் சுதந்திரமாக ஜீன்ஸ், டி- சர்ட் உடைகள் அணியும்போது, ஆண்கள் இன்றும் அந்தக் காலத்தில் வகுக்கப்பட்ட உடைகளை மட்டுமே அணிந்து வந்த வண்ணம் இருந்தனர். இந்த பாகுபாட்டை உடைக்கும் விதமாக கொல்கத்தாவை சேர்ந்த ஒருவர் சேலை அணிந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது அது இணையத்தில் படு வைரலாகி வருகிறது. 


மேற்கு வங்கத்தை அடுத்த கொல்கத்தா நகரத்தில் வசித்து வருபவர் 26 வயதான புஷ்பக் சென். இவர் பேஷன் துறையில் பட்டம் பெற்றுள்ளார். இவருக்கு நீண்ட நாட்களாவே பாலின பாகுப்பாட்டை உடைக்கும் வகையில் இந்த சமுகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணம் இருந்துள்ளது. அதை தன்னிடம் இருந்து மாற்றவேண்டும் என்ற அடிப்படையில் தாடி, மீசையுடன் சேலை அணிந்த புகைப்படத்தை தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 






ஒரு நாள் மாற்றத்திற்கு மட்டும் செய்யாமல் தொடர்ந்து அதையே பின்பற்றியும் வந்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், "எமர்ஜிங் ஃபேஷன் இன்ஃப்ளூயன்ஸருக்கான @cosmoindia விருதை நான் வென்றேனா? இல்லை.நான் விருதை எதிர்பார்த்திருந்தேனா? இல்லை? பின்னர் நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன். வங்கத்தை, எனது பாரம்பரியத்தை, எனது தாய்மண்ணி்ன் கலைநயத்தை நான் பிரதிபலிக்க விரும்புகிறேன்" 


"எந்த விருதுக்கும் நான் பரிந்துரைக்கப்படுவேன் என்று 2 வருடங்களுக்கு முன்பே சொல்லியிருந்தால், நான் துவண்டு போகும்வரை வாய்விட்டு சிரித்திருப்பேன்.


மிகவும் மதிப்புமிக்க 3 உள்நாட்டு பிராண்டுகள் ஒன்றிணைந்து இந்த தோற்றத்தை உருவாக்கும் என்பதை என்னால் இன்னும் நம்ப முடியவில்லை" என்று பதிவிட்டுள்ளார். தற்போது, இவரை பாராட்டும் விதமாக பலரும் இவரது இணைய பக்கத்தில் வாழ்த்துகளை பதிவிட்டு வருகின்றனர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண