தங்கலான்


பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள தங்கலான் படம் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. விக்ரம் , மாளவிகா மோகனன் , பார்வதி திருவொத்து , பசுபதி உள்ளிட்டவர்கள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஸ்டுடியோ கிரீன் இப்படத்தை தயாரித்துள்ளது. ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு ,  இந்தி , மலையாளம் , கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் இப்படம் வெளியாகும் நிலையில் அனைத்து மொழிகளிலும் படத்திற்கு ப்ரோமோஷன் வேலைகள் நடைபெற்று வருகின்றன. முன்னதாக கேரளாவில் மால் திறப்பு விழா ஒன்றில் விக்ரம் கலந்துகொண்டார். இதனைத் தொடர்ந்து சென்னையில் இசை வெளியீடு நிகழ்ச்சி நடைபெற்றது.  நேற்று ஆகஸ்ட் 6 ஆம் தேதி கன்னடட்த்தில் ப்ரோமோஷனுக்காக படக்குழு பெங்களூரு கிளம்பிச் சென்றனர். 


மினுக்கி பாடலுக்கு  நடனமாடிய படக்குழு






இந்த நிகழ்ச்சியில் நடிகர் விக்ரம் , டேனியல் ,  நடிகை மாளவிகா மோகனன் மற்றும் இயக்குநர் ரஞ்சித் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டார்கள். படக்குழுவினர் அனைவரும் சேர்ந்து தங்கலான் படத்தின் மினுக்கி பாடலுக்கு நடனமாடும் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. தங்கலான் படத்தில் தனது நடிகர்களை தான் ரொம்ப கஷ்டப் படுத்தியதாகவும் அந்த மாதிரி தான் நடந்துகொண்டதற்காக இயக்குநர் ரஞ்சித் மேடையில் மன்னிப்புக் கேட்டது குறிப்பிடத் தக்கது.