கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இதில், 15 பேர் 200-க்கு 200 என முழு மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர்.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் 7 இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு, சேலம் தலைவாசல், உடுமலைப் பேட்டை, தேனி வீரபாண்டி ஆகிய இடங்களில் இந்த மருத்துவக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.
இந்த கல்லூரிகளில் 5 1/2 ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவப் படிப்புக்கு (பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச்) 660 இடங்கள் இருக்கின்றன. இதில், சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு ஆகிய 4 கல்லூரிகளில் உள்ள 420 இடங்களில் மட்டும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 5 சதவீத இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. இதற்கான 63 இடங்கள் போக, தமிழ்நாட்டு மாணவர்களுக்கு 597 இடங்கள் உள்ளன.
B.Tech. - Food Technology
உணவுத் தொழில்நுட்பப் பட்டப் படிப்பு (பி.டெக். பயோடெக்னாலஜி) படிப்பு, சென்னை உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரியில் கற்பிக்கப்படுகிறது. இந்தப் படிப்புக்கு 4 ஆண்டுகள் அவகாசம் ஆகும்.
BTech – Poultry Technology
கோழியின தொழில்நுட்பப் பட்டப் படிப்பு, ஓசுர் கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் கற்பிக்கப்படுகின்றது. இந்தப் படிப்பும் மொத்தம் 4 ஆண்டுகளுக்குக் கற்பிக்கப்படுகின்றது.
BTech – Dairy Technology
பால்வளத் தொழில்நுட்பப் பட்டப் படிப்பு (பி.டெக்.டய்ரி டெக்னாலஜி) படிப்பு, சென்னை உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரியில் கற்பிக்கப்படுகிறது. இந்தப் படிப்புக்கு 4 ஆண்டுகள் அவகாசம் ஆகும். எனினும் முந்தைய படிப்புகளைக் காட்டிலும் குறைவான இடங்களே ஒதுக்கப்படுகின்றன.
இதற்கிடையே பி.வி.எஸ்சி. & ஏ.எச். மற்றும் பி.டெக். (உணவுத் தொழில்நுட்பம் / கோழியினத் தொழில்நுட்பம் / பால்வளத் தொழில்நுட்பம்) B.V.Sc. & A.H. and B.Tech. (Food Technology/ Poultry Technology/ Dairy Technology) ஆகிய படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு நடந்து முடிந்தது.
பி.வி.எஸ்சி. ஏ.ஹெச் படிப்புக்கு 14,497 பேரும், பி.டெக் படிப்புகளுக்கு 3,000 பேரும் என மொத்தம் 17,497 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இவர்களின் விண்ணப்பப் பரிசீலனை செய்யும் பணிகள் முடிந்த நிலையில், தகுதியான மாணவ, மாணவிகளின் தரவரிசைப் பட்டியல் இன்று (ஆக.7) வெளியாகி உள்ளது.
தரவரிசைப் பட்டியலைக் காண்பது எப்படி?
மாணவர்கள் தங்களின் தரவரிசைப் பட்டியலை https://adm.tanuvas.ac.in/tnUgadmission/Dashboard/frmIndex.aspx?v20250608 என்ற இணையப் பக்கத்தில் காணலாம்.
https://adm.tanuvas.ac.in/tnUgadmission/Instructions/RL/BVSC_ACA_V1.pdf?v=20240608 என்ற இணைப்பை க்ளிக் செய்து, 200 முதல் 170 வரை கட் ஆஃப் மதிப்பெண்கள் பெற்றவர்களின் தரவரிசைப் பட்டியலைப் பார்க்க முடியும். இதில் திவ்யா, அபிஸ்ரீ உள்ளிட்ட 15 பேர் 200-க்கு 200 மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர்.
அதேபோல, https://adm.tanuvas.ac.in/tnUgadmission/Instructions/RL/BVSC_ACA_V2.pdf?v=20240608 என்ற இணைப்பை க்ளிக் செய்து, 170 முதல் 83 வரை கட் ஆஃப் மதிப்பெண்கள் பெற்றவர்களின் தரவரிசைப் பட்டியலைப் பார்க்கலாம்.
கூடுதல் தகவல்களுக்கு: https://www.tanuvas.ac.in/