போலீஸ் கெட் அப்பில் ரஜினிகாந்த் காரில் வந்திறங்க ரஜினி ரசிகர்கள் அவரை ஆரவாரம் செய்து வரவேற்றுள்ளார்கள்.


வேட்டையன்


லைகா ப்ரோடக்‌ஷ்ன்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் படம் வேட்டையன். ஜெய் பீம் படத்தை இயக்கிய த.செ ஞானவேல் இந்தப் படத்தை இயக்குகிறார். அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில் , மஞ்சு வாரியர், ரானா டகுபதி, ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்ட நடிகர்கள் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்து வருகிறார். 


வேட்டையன் படப்பிடிப்பு


 வேட்டையன் படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து திருநெவேலி, தூத்துகுடி , சென்னை , பாண்டிச்சேரி , மும்பை உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது,  கேரளா முதல் மும்பை வரை இப்படத்தில் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று ரஜினி ரசிகர்கள் அவரை கொண்டாடி வரவேற்று வருகிறார்கள். இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில்  நிலையில் தற்போது வேட்டையன் படத்தின் படக்குழு ஆந்திரா மாநிலம் கடப்பா சென்றுள்ளது. இதற்காக ரஜினி நேற்று ஆந்திரா புறப்பட்டுச் சென்றார். படப்பிடிப்பு தளத்தில் ரஜினி வேட்டையன் பட கெட் அப்பில் போலீஸ் உடை அணிந்து காரில் இறங்க அவரது ரசிகர்கள் கூச்சலிட்டு ஆரவாரம் செய்து அவரை வரவேற்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் காரில் இருந்தபடியே ரசிகர்களுக்கு ரஜினி கையசைக்கிறார்.






 




வேட்டையன் படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் தலைவர் 171 படத்தில் நடிக்க இருக்கிறார். இதனைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் அவர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. தொடர்ந்து நெல்சன் திலிப் குமார் இயக்கும் ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்தில் ரஜினி நடிக்க இருக்கிறார். சமீபத்தில் வெளியாகியிருக்கும் தகவலின் படி பிரபல பாலிவுட் தயாரிப்பாளரான சஜித் நதியத்வாலாவுடன் முதல் முறையாக கைகோர்த்து உள்ளார். இவர்கள் கூட்டணியின் பான் இந்திய திரைப்படம் ஒன்று உருவாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்த அதிகாரப் பூர்வமான தகவலை சஜித் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டார்.




மேலும் படிக்க : Thalapathy Vijay: நேரில் வந்து சர்ப்ரைஸ் தந்த விஜய்: நெகிழ்ச்சியுடன் பதிவிட்ட ரோகிணி திரையரங்க ஓனர் மகன்


King Richard Review: இது செரீனா வில்லியம்ஸ் இல்லை; அவருடைய தந்தையின் கதை... கிங் ரிச்சர்ட் படம் எப்படி இருக்கு?