ரோகிணி திரையரங்கத்தில்  நிர்வாக இயக்குநரான ரேவந்த் சரணை சந்தித்து அவரது திருமணத்திற்கு நடிகர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


ரோகிணி திரையரங்கம்


சென்னையில் முதன்மையான திரையரங்குகளில் ஒன்று ரோகிணி திரையரங்கம். எத்தனையோ மல்டிபிளக்ஸ் திரையரங்கங்கள் சென்னையில் இருந்தாலும் அனைத்து தரப்பு மக்களும் ஒரே இடத்தில் சேர்ந்தார்போல் படம் பார்க்கும் ஒரு திரையரங்கமாக ரோகிணி திரையரங்கம் இருந்து வருகிறது. ஒரு படத்திற்கு எப்படியான வரவேற்பு கிடைக்கிறது என்பதை தெரிந்துகொள்ள வேண்டுமானால் நட்சத்திரங்கள் ரோகிணி திரையரங்கத்திற்கு சென்று படம் பார்ப்பதே வழக்கம். அதிலும் குறிப்பாக ரோகிணி திரையரங்கம் என்றால் அது நடிகர் விஜயின் கோட்டையாக கருதப்படுகிறது. விஜயின் பல ஹிட் படங்கள் இந்த திரையரங்களில் வசூல் படைத்திருக்கின்றன. சமீப காலங்களில் ரோகிணி திரையரங்கத்தில் ஸ்டார்களின் படத்தின் ட்ரெய்லர் வெளியானால் அதை திரையிடுவது நடந்து வருகிறது. விஜயின் லியோ படத்தின் ட்ரெய்லர் வெளியானபோது அதை ரோகிணி திரையரங்கம் வெளியிட்டது. இந்த நிகழ்வில் ரசிகர்கள் திரையரங்கத்தில் இருக்கைகளை சேதப்படுத்திய நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியது.


திருமண வாழ்த்து தெரிவித்த தளபதி விஜய்






தற்போது ரோகிணி திரையரங்கத்தில் உரிமையாளர் பன்னீர் செல்வம் மகன் ரேவந்த் சரணின் திருமணம் கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி நடைபெற்றது. ரஜினிகாந்த் சிவகார்த்திகேயன்  உள்ளிட்ட தமிழ் திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள்  இந்தத் திருமணத்தில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். இந்த திருமண நிகழ்ச்சியில் நடிகர் விஜய் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப் பட்டது . ஆனால் கோட் படத்தின் படப்பிடிப்பு மற்றும் கட்சிப் பணிகளில் இருந்த காரணத்தினால் விஜய் இந்த திருமணத்தில் கலந்துகொள்ளவில்லை. இப்படியான நிலையில்  நடிகர் விஜய் ரேவந்த் சரணை தனிப்பட்ட முறையில் நேரில் சந்தித்து அவரை வாழ்த்தியுள்ளார். இந்தத் தகவலை ரேவந்த் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் புதுமண தம்பதிகளுடன் நடிகர் விஜய் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன


கோட்


வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் தற்போது விஜய் நடித்து வருகிறார். சினேகா, பிரபுதேவா, பிரஷாந்த், லைலா. மோகன், பிரேம்ஜி, மீனாக்‌ஷி செளதரி, வைபவ் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். ஏ.ஜி.எஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்து வருகிறது. யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைத்து வருகிறார். 




மேலும் படிக்க : Chef Damu - Venkatesh Bhat: குக் வித் கோமாளிக்கு பை பை: புதிய ஷோவில் களமிறங்கும் செஃப் தாமு - வெங்கடேஷ் பட்


Today Movies in TV, February 28: பிப்ரவரி ஸ்பெஷல்.. டிவியில் இன்றைய படங்கள் என்னென்ன?