தான் யாருக்கும் போட்டியில்லை என்று நடிகர் திகலம் சிவாஜி கணேசன் முன்னிலையில் ரஜினிகாந்த் பேசியுள்ள வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.


லால் சலாம்


ஐஷ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் , விக்ராந்த் நடித்துள்ள லால் சலாம் . லைகா ப்ரோடக்‌ஷன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்தப் படம் வரும் பிப்ரவரி மாதம் 9 ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் ஆடியோ லாஞ்ச் நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பேசியது பரவலாக கவனமீர்த்துள்ளது.


 நான் பார்த்து வளர்ந்த பையன் விஜய்


கடந்த ஆண்டு நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் திரைப்படம் வெளியானது. அதன் இசைவெளியீட்டு விழாவில் பேசிய ரஜினி, உயர உயர பறந்தாலும் காக்கா, கழுகு ஆகாது என்ற வகையிலான கதையை கூறினார். அப்படி அவர் காக்கா என குறிப்பிட்டது, நடிகர் விஜயை தான் என ரஜினியின் ரசிகர்கள் தாமாகவே முடிவு செய்து கொண்டு சமூக வலைதளங்களில் ஏராளமான விமர்சனங்களை குவித்தனர். இதனைத் தொடர்ந்து ரஜினி மற்றும் விஜய் ரசிகர்களுக்கு இடையில் மோதம் சூடுபிடித்தது.


அதேபோல் லியோ படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில்  நடிகர் விஜய் “ஒரு காட்டுக்கு 2 பேர் வேட்டைக்கு போனாங்க. அந்த காட்டுல மான்,மயில், முயல், காகம், கழுகு என எல்லாம் இருக்கும் என குட்டி கதை சொல்ல அவர் கழுகு என சொன்னதும் மொத்தம் அரங்கமும் அதிர்ந்தது.


இந்த நிலைமையில் இன்னும் குளறுபடியை ஏற்படுத்தும் வகையில் சைடு  இயக்குநர் ரத்தினவேலு மேடையில் “எவ்வளவு மேல பறந்தாலும் பசிச்சா கீழ வந்துதான் ஆகனும்”  என்று பேசி எறியும் நெருப்பில் எண்ணையை ஊற்றிவிட்டு போனார். இதனைத் தொடர்ந்து ரஜினி விஜய் ரசிகர்களிடையான மோதல் அளவுகடந்து போனது. இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தான் நேற்று ரஜினிகாந்த் பேசியது அமைந்தது.


” விஜய் நான் பார்த்து வளர்ந்த பையன். நான் எப்போதும் அவரோட நலம் விரும்பிதான். தயவு செஞ்சு என்னையும் விஜயையும் ஒப்பிடாதீர்கள்” என்று வேண்டுகோள் வைத்தார். ரஜினியின் இந்த வெளிப்படையான பேச்சு ரசிகர்களை கவர்ந்துள்ளது. இதேபோல் முன்பு ஒருமுறை ரஜினிகாந்த் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் முன் பேசிய வீடியோ ஒன்றும் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.


நான் யாருக்கும் போட்டியில்லை






இந்த வீடியோவில் ரஜினிகாந்த் சிவாஜி கணேசன் தான் தாடி வளர்ப்பதைப் பார்த்து ‘ என்னடா எனக்கு போட்டியா’ என்று விளையாட்டாக கேட்டதாகவும் அதற்கு பதிலாக “நான் யாருக்கும் போட்டியில்லை, நான் யார் வழிக்கும் போக மாட்டேன், என்னுடைய வழிக்கு யாரையும் வர சொல்ல மாட்டேன்” என்று பேசியுள்ளார். ஆரம்ப காலக் கட்டம் முதலாக ரஜினிகாந்த் எப்போதும் யாருடனும் போட்டி போட விரும்பப் பட்டதே இல்லை என்பதை இதுபோல் நிறைய இடங்களில் குறிப்பிட்டு வந்துள்ளார். ரஜினி விஜய் ரசிகர்களுக்கு இடையில் இப்படியான மோதல் ஏற்பட்ட நிலையிலும் முதலில் வந்து வெளிப்படையாக பேசி ஒரு மூத்த நடிகராக தனது முதிர்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார்.