ஏ.ஆர். ரஹ்மான்


கடந்த 32 ஆண்டுகளாக இசையால் மக்களை ஆச்சரியப்படுத்தியும் புதுமைகளை நிகழ்த்தியும் வருபவர் இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான். ரோஜா படத்தில் தொடங்கிய அவரது பயணம் தற்போது அயலான் படம் வரை  நீடித்து வருகிறது, இந்த ஆண்டில் பல்வேறு முக்கியமான படங்களில் ரஹ்மானின் இசைக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது. இந்தியாவில் மட்டுமில்லாமல் உலகத்தின் ஒவ்வொரு மூலையிலும் ரஹ்மானின் இசைக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். இசையில் இவ்வளவு தீவிரமாக இயக்கும் ரஹ்மான் தனது ரசிகர்களிடம் காட்டும் அன்பும், நகைச்சுவையான வெளிப்பாடுகளும், எப்போதும் ரசிகர்களை கவர்ந்து வந்துள்ளது. சமீபத்தில் தனது ரசிகை ஒருவர் பாடுவதை ரஹ்மான் வீடியோ எடுத்துள்ளது இணையதளத்தில்  வைரலாகி வருகிறது. 


வந்தே மாதரம்






சமீபத்தில் வெளிநாட்டிற்குச் சென்றிருந்த ஏ.ஆர் ரஹ்மான் காரில் செல்லும்போது அவரை ஒரு இளம் பெண் வழிமறித்துள்ளார். அவரிடம் ரஹ்மானின் மிகப்பெரிய ரசிகை என்றும், அவருக்காக ஒரு பாடலை, தான் பாட ஆசைப்படுவதாகவும் தெரிவித்தார். ரஹ்மானின் சம்மதம் கிடைத்தது வந்தே மாதரம் பாடலை பாட தொடங்கினார் அந்த பெண். அவர் பாடுவதை பார்த்த ரஹ்மான் உடனே தனது ஃபோனை எடுத்து வீடியோ எடுக்கத் தொடங்குகிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 


ரஹ்மான் இசைமைத்துள்ள படங்கள்


ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள அயலான் படம் தற்போது வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து ரஜினிகாந்த் , விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டவர்கள்  நடித்துள்ள லால் சலாம் படத்திற்கு இசையமைத்துள்ளார் ரஹ்மான் , முன்னதாக தேர் திருவிழா என்கிற பாடல் இந்தப் படத்தில் வெளியானதை தொடர்ந்து இன்று  "ஏ புள்ள" பாடல் வெளியாகியுள்ளது.








மேலும் படிக்க : Ayalaan Review: ஏலியனுடன் “பொங்கல்” .. குழந்தைகளைக் குறிவைத்த சிவகார்த்திகேயன்.. அயலான் திரைப்பட விமர்சனம்! 


Captain Miller Review: "தரமான ஆக்ஷன் விருந்து" தனுஷின் கேப்டன் மில்லர் பட விமர்சனம் இதோ!