நாட்டில் கொலை, கொள்ளை, தற்கொலைகள்,  பாலியல் வன்கொடுமை போன்ற செய்திகள் தினமும் வருவது அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது. டிவியை பார்த்தாலும், தினசரி பேப்பரை திறந்தாலும் இந்த செய்திகளே அதிகம் உள்ளன. பொதுமக்களும், எதிர்மறையான செய்திகளை தினமும் படித்து வருவதால் அவர்களுக்குள்ளும் ஒருவித பயமும், அதிர்ச்சியும் ஏற்படுகிறது. இந்த செய்திகளுக்கு இடையே, தற்போது தொழில் நுட்பத்தின் வளர்ச்சியால், மூன்றாவது கண் என்று கூறப்படும் கேமராவால், பல்வேறு சுவாரஸ்யமான, அதிர்ச்சிகரமான சம்பவத்தின் காட்சிகளும் கிராம் முதல் நகரம் வரை உள்ள மக்களுக்கு உடனே தெரிந்து விடுகிறது. இதில், சுவாரஸ்யமான வீடியோக்கள் பல சமூகவலைதளங்களில் வைரலாகி, உலகத்தின் எந்த மூலைகளில் இருக்கும் மனிதர்களுக்கும் சென்று சேர்ந்து விடுகிறது. அந்த வகையில், போட்டோஷூட்டின்போது, பெண் ஒருவர் ஊஞ்சலில் இருந்து தண்ணீரில் விழும் காட்சி வைரலாகி வருகிறது. Watch video: முதல்முறையாக பீட்சா சாப்பிட்ட பாட்டியின் ரியாக்‌ஷன் - வீடியோ பாருங்க..!


ஒரு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட அந்த வீடியோவில், பெண் ஒருவரை கொண்டு தண்ணீருக்கு அருகில் போட்டோஷுட் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், அப்போது அவர்கள் கவனமாக இருக்கவில்லை. இதனால், போட்டோஷூட்  பெரும் தோல்வியில் முடிந்தது. வைரலாகி வரும் அந்த வீடியோவில்,  பெண் ஒருவர் ஒரு அழகான நீண்ட இளஞ்சிவப்பு ஆடையுடன் ஆற்றின் கரையின் மீது ஊஞ்சல் ஆடுகிறார். ஒருவரின் துணையுடன் தண்ணீரின் மேல் வட்டமிடுவது போல் தோன்றும் ஊஞ்சலில் அவர் அமர்ந்திருக்கிறார். சில அடி ஆழமான தண்ணீரில் கயிறுகளால் ஊஞ்சல் தொங்கிக் கொண்டிருந்தது. அந்த பெண் ஊஞ்சலில் அமர்ந்து கேமராவுக்கு போஸ் கொடுத்ததால், போட்டோஷூட் நன்றாக நடப்பதாக தெரிகிறது. Watch Video | உலகத்துலேயே இதுதான் சின்ன குரங்காம்.. IFS அதிகாரி பகிர்ந்த க்யூட் வீடியோ..


பின்னர், கேமராவுக்கு பின்பக்கம் திரும்பி போஸ் கொடுக்கிறார். யாரோ ஒருவர் அவரது ஆடையை காற்றில் இழுத்து குலுக்கி பார்க்க முயற்சிக்கிறார். அப்போது, திடீரென்று ஊஞ்சலில் இருந்து அவர் கீழே விழுந்து விடுகிறார். ஆனால்,  தண்ணீரிலிருந்து வெளியே வரும்போது, அந்தப்பெண் சிரித்துக்கொண்டே இருந்தார்.


 






 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூடியூபில் வீடியோக்களை காண