வாழ்கை மிக மிக அழகானது. இன்றைய நாகரிக உலகத்தில் வாழ்கை என்பது ஏதோ பெரிய விஷயங்களை அடைந்து சாதனை செய்வதாக பார்க்கப்படுகிறது. ஆனால் உண்மையில் வாழ்கை என்பது வாழ்வதில் இருக்கிறது. சில்லென வீசும் காற்று, சிறு குழந்தையின் புன்சிரிப்பு, வாகனமில்லா சாலைகள், கடற்கரையில் நிலவும் அமைதி, செல்லப்பிராணிகளின் செல்ல சேட்டைகள் என வாழ்கை ஆகப் பெரும் சந்தோஷங்கள் சின்னசின்ன விஷயங்களில்தான் பொதிந்திருக்கிறது. இதைச் சார்ந்த வீடியோக்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வைரலாகும்.
அப்படி ஒரு வீடியோதான் தற்போது இணையத்தை கலக்கிக் கொண்டிருக்கிறது. என்ன வீடியோ என்று கேட்கிறீர்களா..பொதுவாக குரங்குகளை அனைவருக்கும் பிடிக்கும். அவை எது செய்தாலும் ரசிக்கத்தக்கதாக இருக்கும். அப்படித்தான் இங்கும் ஒரு குரங்கு இருக்கிறது. என்ன வித்தியாசம் என்னவென்றால் இதுதான் உலகிலேயே மிகச் மிகச் சிறிய குரங்கு. கிராம் எடையில் இருக்கும் அந்த குரங்கிற்கு ஒருவர் ஸ்பூனில் உணவை ஊட்டுகிறார். அந்த உணவை குரங்குக்கே உண்டான பாணியில் உண்கிறது அந்தக் குரங்கு. இந்த வீடியோதான் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவை IFS அதிகாரியான சுஷந்தா நந்தா அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். சரியாக 50 நொடிகள் ஓடக் கூடிய இந்த வீடியோவை இது 1000த்துக்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். 150க்கும் மேற்பட்டோர் ரீட்விட் செய்துள்ளனர்.