கோலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரான த்ரிஷா, கடந்த 2019-ம் ஆண்டு இன்ஸ்டாகிராம் கணக்கைத் திறந்தார். இன்ஸ்டாகிராமில் ஆக்டீவாக இல்லையென்றாலும் அவ்வப்போது பதிவுகளை பதிவிட்டு வந்தார். அந்த வரிசையில், மெக்சிகோவில் இருந்து த்ரிஷா பகிர்ந்திருக்கும் வீடியோ ரசிகர்களின் லைக்ஸ்களை அள்ளி வருகிறது.
இன்ஸ்டாகிராமில் கிட்டத்தட்ட 3.2 மில்லியன் பேர் த்ரிஷாவை ஃபாலோ செய்து வருகின்றனர். இந்நிலையில், மெக்சிகோ நாட்டிற்கு பயணம் செய்திருக்கும் த்ரிஷா, அங்கிருந்து ஒரு பூம்ராங் வீடியோவை பதிவிட்டிருக்கிறார். அழகான நீள நிற உடையில், ஸ்டைலாக தொப்பி அணிந்து கொண்டு ”என்னை செனாரிட்டா என அழைப்பார்கள்” என்ற கேப்ஷனோடு வீடியோவை பகிர்ந்திருக்கிறார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
த்ரிஷா தற்போது பொன்னியின் செல்வன் என்னும் மெகா பட்ஜெட் படத்தில் நடித்து முடித்துள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் 'பொன்னியின் செல்வன்' படத்தின் இரண்டு பாகங்களின் படப்பிடிப்பும் முடிவடைந்து டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்துக்கு முன்னதாகவே 'கர்ஜனை', 'சதுரங்க வேட்டை 2' மற்றும் 'ராங்கி' உள்ளிட்ட படங்களையும் முடித்துவிட்டார் த்ரிஷா அவை வெளியீட்டிற்காக காத்திருக்கின்றன.மேலும் 'ராம்' என்னும் ஒரு மலையாள படத்தினை மட்டுமே கைவசம் வைத்துள்ளார் த்ரிஷா. இந்நிலையில் புதிதாக வெப் சீரிஸ் ஒன்றிலும் ஒப்பந்தமாகியுள்ளார். அது குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. தெலுங்கில் உருவாகும் அந்த வெப் சீரிஸிற்கு பிருந்தா என பெயர் வைக்கப்பட்டுள்ளது. தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளிலும் டப் செய்து வெளியிடப்படும் என கூறப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்