தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர், ரோட்டு கடையில் பேரம் பேசுவது போல ஒரு வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் 15 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை நயன்தாரா. ரஜினி, அஜித், விஜய், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ள இவர், பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தில் நடித்து லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தையும் பெற்றார். தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்து தென்னிந்திய ரசிகர்களை தன்பக்கம் இழுத்து கட்டிப்போட்டுள்ளார்.
இவர் படங்கள் வெளியாகும் நேரத்தில், ஸ்டார் நடிகர்களின் படத்திற்கு உள்ள வரவேற்பு இவரின் படத்திற்கும் கிடைக்கும். அந்தளவிற்கு ரசிகர்களை வைத்துள்ள நயன்தாரா சமூகவைலைதளங்களில் அவ்வளவாக ஆக்டிவாக இல்லை என்றாலும், இவர் தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியானால், அதனை சமூகவலைதளங்களில் வைரலாக்கி ரசிகர்கள் ட்ரெண்ட் செய்துவிடுவார்கள்.
Also Read | Zomato Apology: 'பெப்பர் சிக்கன் சாப்பிட இந்தி தெரியனுமா?' கொந்தளித்த தமிழ்நாடு; பம்மி பணிந்தது சோமாட்டோ!
அந்த வகையில், நயன்தாராவின் வீடியோ ஒன்று தற்போது சமூகவலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், நயன்தாரா ஒரு ரோட்டோர கடையில் பேரம் பேசுவது போல் இருக்கிறது. பேக் கடையில், குறைந்த விலைக்கு பேக்கை கொடுக்குமாறு, அவர் பேரம் பேசுகிறார் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர்.
“பெண்கள் எப்போதும் பெண்களாக இருப்பார்கள் விற்பனையாளருடன் நயன்தாரா பேரம் பேசும் விதம் . அய்யோ ஸோ க்யூட்டி” என்று அந்த வீடியோ வெளியிடப்பட்ட டுவிட்டர் பக்கத்தில் ரசிகர்கள் ஒருவர் எழுதியுள்ளார்.
ஆனால், இந்த வீடியோ, ‘காத்துவாக்குல ரெண்டு காதல் ’ படத்தின் ஷூட்டின்கின்போது எடுக்கப்பட்ட வீடியோ என்றும் கூறப்படுகிறது. எது நிஜம் என்று படம் வெளியாகும்போது தெரிந்துவிடும்.
சில மாதங்களுக்கு முன்பு, புதுச்சேரியில் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ ஷூட்டிங்கிற்காக படிப்பிடிப்பு தளம் செல்வதற்காக காரில் ஏற வந்த நயன்தாராவை ரசிகர்கள் சூழந்துக்கொண்டு செல்ஃபி எடுக்க முயன்றுள்ளனர். எதிர்பாராத ரசிகர் கூட்டத்தை சமாளிக்க முடியாமல் , நயன்தாரா காரில் ஏறிச்சென்ற காட்சிகள் வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது.
‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி வருகிறார். இதில், விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரா, சமந்தா உள்ளிட்ட முன்னணி நடிகைகள் நடித்து வருகின்றனர். மேலும், ரஜினிக்கு ஜோடியா நடித்த ‘அண்ணாத்த’ படம் தீபாவளிக்கு வெளியாகிறது. சமீபத்தில் ஓடிடியில் வெளியான ‘நெற்றிக்கண்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்