அலியா பட் நடிப்பில் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கி உருவாகி இருக்கும் திரைப்படம் கங்குபாய் கத்தியாவாடி. பாலிவுட்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் பட்டியலில் இந்தப் படம் தற்போது உள்ளது. படத்தின் ரிலீஸ் தேதியை அலியா அண்மையில் அறிவித்தார். இதையடுத்து 6 ஜனவரி 2022ல் இந்தப் படம் வெளியாக உள்ளது. அலியாவுடன் அஜய் தேவ்கன், ஹூமா குரேஷி ஆகியோரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
இதற்கிடையே இந்தப் படத்தில் நடிகர் நவாசுதீன் சித்திக் நடிக்க இருந்ததாகவும் ஆனால் இறுதியில் அந்த திட்டம் கைவிடப்பட்டதாகவும் பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நவாசுதீன் நடித்திருந்தால் சஞ்சய் லீலா மற்றும் நவாஸுதீனின் முதல் கூட்டணியாக இந்தப் படம் இருந்திருக்கும். படத்தில் பத்திரிகையாளர் கதாப்பாத்திரத்தில் நவாஸுதீன் நடிக்க இருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் அவருக்கு கால்ஷீட் ஒத்துவராததை அடுத்து இதிலிருந்து விலகிக் கொண்டார்.
2019 இறுதியில் தொடங்கப்பட்ட இந்தப் படம் கொரொனா பேரிடருக்கு இடையே ஜூன் 2022ல் முடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.