விஜய் ஆண்டனி
இசையமைப்பாளராக பல ஹிட் பாடல்களை கொடுத்த விஜய் ஆண்டனி தற்போது அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். நான் , சலிம் , பிச்சைக்காரன் போன்ற ஒரு சில படங்கள் அவருக்கு நல்ல வெற்றியையும் கொடுத்தன. ஆனால் அவர் நடித்த மற்ற படங்கள் சமீபத்தில் வெளியாகிய ரோமியோ உட்பட பெரியளவில் கவனம் பெறவில்லை. கடந்த ஆண்டு மட்டுமே தமிழரசன் , பிச்சைக்காரன் 2 , கொலை , ரத்தம் என விஜய் ஆண்டனி நடித்த நான்கு படங்கள் வெளியாகின.
விஜய் ஆண்டனியின் படங்களைக் காட்டிலும் அவற்றின் டைட்டில் ரசிகர்களின் கவனத்தை அதிகம் ஈர்ப்பவை. பிச்சைக்காரன் , சாத்தான், இந்தியா பாகிஸ்தான் , திமிரு புடிச்சவன் , கொலை , ரத்தம் , யமன் என டைட்டிலை கேட்டாலே கொஞ்சம் பயங்கரமாக தான் இருக்கும். அந்த வகையில் தற்போது விஜய் ஆண்டனி நடித்துள்ள படம்தான் மழை பிடிக்காத மனிதன்.
மழை பிடிக்காத மனிதன் டிரைலர்
கோலிசோடா , பத்து என்றதுக்குள்ள உள்ளிட்ட படங்களை இயக்கிய விஜய் மில்டன் இப்படத்தை இயக்கியுள்ளார். மேகா ஆகாஷ், சரத்குமார், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். விறுவிறுப்பான த்ரில்லர் படமாக உருவாகி இருக்கும் இப்படத்தின் டிரைலர் இன்று மாலை வெளியாக இருக்கிறது. இதனை முன்னிட்டு டிரைலர் வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற இருக்கிறது.
முகத்தில் கரியுடன் வந்து சேர்ந்த விஜய் ஆண்டனி
இந்த நிகழ்ச்சிக்கு வந்த நடிகர் விஜய் ஆண்டனி முகத்தின் ஒரு பக்கம் கரியுடன் வந்து சேர்ந்தார். தற்போது தான் நடித்து வரும் படத்திற்காக போட்ட மேக் அப் என்றும் அதை எடுக்கவே ஒரு மணி நேரம் ஆகும் என்பதால் நிகழ்ச்சிக்கு தாமதமாகிவிடக் கூடாது என்பதால் அப்படியே வந்துவிட்டதாக விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
மழை பிடிக்காத மனிதன் படத்தின் டிரைலரை நடிகர் சரத்குமார் , நடிகர் அருண் விஜய் மற்றும் நடிகர் டொவினோ தாமஸ் ஆகியவர்கள் வெளியிட இருக்கிறார்கள்.
மேலும் படிக்க : Harish Kalyan: அடுத்த கிரிக்கெட் கதை: லப்பர் பந்து வீச்சாளராக ஹரிஷ் கல்யாண்: பிறந்தநாள் பரிசாக வெளியான அப்டேட்!
Vidyut Jammwal: பட தோல்விகளால் கோடிகளில் நஷ்டம்.. சர்க்கஸ் குழுவில் இணைந்த துப்பாக்கி பட வில்லன்!