சுட்ட கதை, நட்புனா என்னனு தெரியுமா, முருங்கைக்காய் சிப்ஸ், தர்மபிரபு உள்ளிட்ட படங்களை தயாரித்தவர் ரவீந்திரன் சந்திரசேகரன். படங்களை தயாரிப்பதோடு ஒரு சில படங்களை விநியோகமும் செய்திருக்கிறார். தனியாக யூடியூப் சேனல் தொடங்கி பிக்பாஸ் மற்றும் படங்களுக்கான ரிவியூ கொடுத்தும் பிரபலமடைந்தார். இவர் ஒரு சில படங்களிலும் நடித்திருக்கிறார். கடந்த 2022ஆம் ஆண்டு சின்னத்திரை நடிகையும், தொகுப்பாளருமான மகாலட்சுமியை திருமணம் செய்து கொண்டார். 

Continues below advertisement

காதல் திருமணம்

நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்தி வெளியானதுமே உடல் ரீதியாக பலரும் விமர்சித்து பேசியிருந்தனர். ஜோடி பொருத்தம் குறித்தும் பேசியது பேசுபொருளானது. இதைத்தொடர்ந்து ரவீந்திரன் ஆமா என்னிடம் பணம் இருக்கு, நா அவங்களை நல்லபடியா பாத்துக்குவேன். இருவருக்கும் பிடித்திருந்தது திருமணம் செய்துகொண்டோம் உனக்கு வயித்தெறிச்சல் வந்தால் தண்ணியை குடி என்று தக்க பதிலடியும் தந்தார். திருமணத்திற்கு பிறகு பல்வேறு மோசடி புகாரில் சிக்கி வரும் ரவீந்திரன் அண்மையில் கைது செய்யப்பட்டு பிணையில் வெளியே வந்தார். 

மோசடி புகார்

இந்நிலையில், மும்பையை சேர்ந்த தொழிலதிபர் அஜய் ஜெகதீஷ் என்பவரிடம் ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்தால் அதிகம் லாபம் கிடைக்கும் எனக் கூறி ரூ.5.24 கோடி செய்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெற்றுத்தருவதாக கூறி இவரும் கேரளாவை சேர்ந்த ரோகன் என்பவரை கைது செய்தனர். இந்த வழக்கில் ரவீந்தரின் நண்பர் கைதான நிலையில், அந்த பணத்தை அவர் ரவீந்தருக்கு தான் அனுப்பி இருக்கிறார் என்பதால் ரவீந்தரையும் கைது செய்ய மும்பை போலீசார் வந்தனர்.

Continues below advertisement

நடிகை மகாலட்சுமி பதிலடி

ஆனால் தனக்கு உடல்நிலை சரியில்லை என சொல்லி ரவீந்தர் சான்றிதழ் கொடுத்ததால் அவரை அடுத்த வாரம் ஆஜராக சம்மன் கொடுத்து சென்றதாக தகவல் வெளியானது. இந்நிலையில், ரவீந்திரனின் மனைவி மகாலட்சுமி இந்த விவகாரம் தொடர்பாக இன்ஸ்டாகிராமில் போஸ்ட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், "நாங்கள் நலமாக இருக்கிறோம். இதில் டிராமா செய்வதை விட அமைதியாக இருக்க முயற்சிக்கிறோம். எங்களுக்கு என்ன நடந்தது என்ற உண்மை தெரியும். உண்மை எது என்று தெரிந்துகொள்ளாமல் எங்களை பற்றி நீங்கள் முடிவெடுக்க வேண்டாம். நாங்கள் நன்றாக பாசிட்டிவுடன் மகிழ்ச்சியாக இருக்கிறோம் என பதிவிட்டுள்ளார்.