நகைக் கடை விளம்பரத்திற்காக மோகன்லால் அப்படியே பெண்மையை போன்ற நளினத்தை வரவைத்து ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளார். தற்போது இவரது நடிப்பில் வெளியான விளம்பரம் தான் டிரெண்டிங்காகி வருகிறது. லாலேட்டனை பார்த்ததும் ரசிகர்கள் மெய்சிலிர்த்து போனார்கள். இதுதான் நடிப்பா தலைவா என்றும் மலையாள ரசிகர்கள் இணையத்தை கலங்கடித்து வருகின்றனர். இதற்கு முன்பு மோகன்லால் பல விளம்பரங்களில் நடித்திருந்தாலும் இதுதான் ஒன் ஆஃப் தி பெஸ்ட் என்று ரசிகர்கள் சொல்கின்றனர். 

பெண்மை தழுவிய நடிப்பு

பிரகாஷ் வர்மா இயக்கிய இந்த விளம்பரத்தில் மோகன்லாலின் பெண்மையை தழுவிய நடிப்புதான் பலரையும் கவர்ந்திருக்கிறது. விளம்பரத்தின் தொடக்கத்தில் படப்பிடிப்பு தளத்திற்கு வரும் மோகன்லாலை இயக்குநர் பிரகாஷ் வர்மா அழைத்து சென்று மாடல் அழகியிடம் அறிமுகம் செய்து வைக்கிறார். அதன் பின்பு மாடல் அழகி அணிந்திருக்கும் வைர நெக்லஸ், பிரேஸ்லட், மோதிரம் மீது மோகன்லாலுக்கு ஈர்ப்பு வருவது போன்று காட்சிகள் இருக்கிறது. பின்னர் மாடல் அழகி கழற்றி வைத்த பிறகு மோகன்லால் அவற்றை அணிந்து கொண்டு கண்ணாடி முன் நின்று  சந்திரமுகி ஜோதிகாவை போன்று தன்னை தானே மெய் மறந்து ரசிப்பது போன்று காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது.

  மெய்சிலிர்த்து போன ரசிகர்கள்

இந்த விளம்பரத்தில் மோகன்லாலின் நடிப்பு பெண்மையை தழுவி இருக்கிறது என்றும். இந்த காட்சிகளை சமூகவலைதளத்தில் பகிர்ந்து ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். லாலேட்டன் நடிப்பு அரக்கன் என்றும் கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் என்றும் கூறி வருகின்றனர். நேற்று மோகன்லால் நடிப்பில் உருவான ஹ்ருதயப்பூர்வம் படத்தின் டீசரும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இருப்பினும் இந்த மாடல் விளம்பரம் தான் தற்போது ஹாட் டாபிக்காகவும் மாறியிருக்கிறது. பெண்களே வெட்கப்படும் அளவிற்கு நடிப்பு என்றும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.