மலையாளத்தில் கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி வெளியாகி கலக்கி வரும் மஞ்சுமெல் பாய்ஸ் படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.
மஞ்சுமெல் பாய்ஸ்
கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி மலையாளத்தில் வெளியானப் படம் மஞ்சுமெல் பாய்ஸ். சிதம்பரம் எஸ் பொதுவால் இப்படத்தை இயக்கியுள்ளார். ஸ்ரீநாத் பாஸி, செளபின் சாஹிர், மரியம் ஜார்ஜ் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். குணா படத்தை ரெஃபரன்ஸாக வைத்து உருவாகி இருக்கும் இப்படம் தமிழ் மற்றும் மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றிபெற்றுள்ளது. 5 கோடி பொருட்செலவில் எடுக்கப்பட்ட இந்தப் படம் இதுவரை ரூ.50 கோடி வசூல் செய்துள்ளது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.15 கோடி வசூலித்துள்ளது.
உலக நாயகன் கமல்ஹாசன் , நடிகர் தனுஷ் , விக்ரம் , உதய நிதி ஸ்டாலின் உள்ளிட்ட பல தமிழ் திரைப் பிரபலங்கள் இந்தப் படத்தைப் பார்த்து படக்குழுவை பாராட்டியுள்ளார்கள். குணா படத்தை ஒரு சின்ன ரெஃபரன்ஸாக பயன்படுத்தி எடுக்கப் பட்டுள்ள இந்தப் படம் குணா படத்திற்கும் குணா குகைக்கு மறுபிறவி எடுத்தது போன்ற ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.
குணா படத்தின் மறுபிறப்பு
இப்படத்தின் இயக்குநர் சிதம்பரம் பேசும்போது “இன்றைய சூழலில் இந்தப் படத்தை குணா குகையில் எடுப்பதற்கே பல்வேறு சவால்கள் இருந்தன. ஆனால் கமல்ஹாசன் இந்தப் படத்தை 33 வருடங்களுக்கு முன்பாக எடுத்திருக்கிறார். அதுவும் பெரிய அளவில் எந்த வித தொழில்நுட்பமும் இல்லாத ஒரு காலத்தில் குணா படத்தை அவர் எடுத்திருக்கிறார் என்பது நினைத்து பார்க்கவே பிரம்மிப்பாக இருக்கிறது.” என்று அவர் கூறியிருந்தார்
மேலும் உலகநாயகன் கமல்ஹாசன் இந்தப் படம் குறித்த தனது அனுபவனத்தைப் பகிர்ந்துகொண்டார். செட்டிற்கு போனபோது குளிரில் கேமரா வேலை செய்யாமல் போனது , குகைக்கு செல்ல தனியாக வழி அமைத்தது உள்ளே என்ன மாதிரியான ஆபத்துகள் இருக்கும் என்று எந்த வித ஐடியாவும் இல்லாமல் இந்த படத்தை தாங்கள் எடுத்து முடித்த கதையை அவர் பகிர்ந்துகொண்டார்.
மஞ்சுமெல் பாய்ஸ் மேக்கிங் வீடியோ
மஞ்சுமெல் பாய்ஸ் படத்தைப் பற்றியும் குணா படத்தைப் பற்றியும் இப்படி பல தகவல்கள் வெளிவந்தபடி இருக்கும் நிலையில் தற்போது மஞ்சுமெல் பாய்ஸ் படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது. மிகச் சிறிய பட்ஜெட்டில் இந்த படம் உருவாகி இருந்தாலும் இந்தப் படத்திற்காக படக்குழு கடின உழைப்பை செலுத்தியிருக்கிறது என்பதை இந்த படத்திற்காக போடப் பட்டிருக்கும் செட்டை வைத்து தெரிந்துகொள்ளலாம்.
மேலும் படிக்க : Manjummel Boys: குணா படத்திற்கு கமல்ஹாசன் முதலில் வைத்த பெயர் என்ன தெரியுமா? மஞ்சுமெல் பாய்ஸ் குழுவிடம் பகிர்ந்த உலக நாயகன்!