Watch Video : பிதாமகன் பட காட்சியை நடித்து காட்டிய லைலா...க்யூட் வீடியோ வைரல்

பிதாமகன் படத்தில் ரசிகர்களை கவர்ந்த நகைச்சுவை காட்சியை நடிகை லைலா நடித்து காட்டியுள்ள வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது

Continues below advertisement

லைலா

2000 களில் கோலிவுட்டில் தனக்கேன ஒரு தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருந்தவர் நடிகை லைலா. ரொமான்ஸ் காமெடி என இரண்டு விதமான நடிப்பை வெளிப்படுத்தக் கூடிய நடிகை லைலா. நந்தா , பிதாமகன் , மெளனம் பேசியதே, தீனா , தில் என பல வெற்றிப்படங்களில் நாயகையாக நடித்துள்ளார் லைலா. சமீப காலங்களில் மறுபடியும் திரையில் தோன்றி வருகிறார் . கார்த்தி நடித்த சர்தார் படத்தின் மூலம் மறுபடியும் கோலிவுட்டில் ரீ எண்ட்ரி கொடுத்த லைலா. விஜயின் தி கோட் படத்தில் சின்ன ரோலில் நடித்தார். தற்போது ஆதி நடித்துள்ள சப்தம் படத்தில் நடித்துள்ளார் லைலா 

Continues below advertisement

சப்தம்

ஈரம் மற்றும் குற்றம் 23 ஆகிய படங்களின் மூலம் கவனமீர்த்த அறிவழகன் தற்போது இயக்கியுள்ள படம் சப்தம். ஆதி, லக்‌ஷ்மி மேனா , லைலா உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். தமன் இசையமைத்துள்ளார். இன்று பிப்ரவரி 28 ஆம் தேதி இப்படம் திரையரங்கில் வெளியாகியுள்ளது. சப்தன் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியின் போது நடிகை லைலா பிதாமகன் படத்தின் நகைச்சுவை காட்சியை நடித்து காட்டியுள்ள வீடியோ ரசிகர்களை கவர்ந்துள்ளது. 

பிதாமகன் காட்சியை ரிகிரியேட் செய்த லைலா

பிதாமகன் படத்தின் சூர்யா தாயம் உருட்டும் காட்சி எல்லா காலத்திற்கு ரசிகர்களின் ஃபேவரெட் காட்சியாக இருந்து வருகிறது. இந்த காட்சியில் குறிப்பாக லைலாவின் நடிப்பு அனைவராலும் ரசிக்கப்பட்டது. இந்த காட்சியை நேர்காணல் ஒன்றில் லைலா ரீகிரியேட் செய்துள்ள வீடியோ சமூக வலைதளத்தில் பரவலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது

Continues below advertisement
Sponsored Links by Taboola