தற்பொழுது பல திரைப்படங்களை கையில் வைத்திருக்கும் நடிகர் விஜய் ஆண்டனி இறுதிச்சுற்று ரித்திகாவுடன் இணைந்து திரில்லர் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் . "விடியும் முன்" திரைப்படத்தின் இயக்குநர் பாலாஜி கே குமார் இந்தப் படத்தை இயக்குகிறார். விஜய் ஆண்டனி நடிக்கும் கோடியில் ஒருவன், பிச்சைக்காரன் 2 மற்றும் அக்னி சிறகுகள் உள்ளிட்ட படங்கள், பலகட்ட தயாரிப்பு கட்டங்களில் இருக்கின்றன .



Vijay Antony on Siva karthikeyan | சிவகார்த்திகேயன் மாதிரி படம் பண்ணனும் - விஜய் ஆண்டனி



கோடியில் ஒருவன்" படம் டீஸர் வெளியாகி சில தினங்களிலேயே 3 மில்லியன் வியூஸ்களைப் பெற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது . இதன் டிரெய்லரை நடிகர் சிவகார்த்திகேயன் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அரசியல் த்ரில்லரில் , நடிகை ஆத்மிகா கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தை இன்பினிட்டி பிலிம் வென்ச்சர்ஸ் மற்றும் செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது. கோடியில் ஒருவனுக்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார், ஒளிப்பதிவு என்.எஸ். உதயகுமார், விஜய் ஆண்டனிதான் எடிட்டர்,எடிட்டராக இது அவரது மூன்றாவது படம்.




இதனை தொடர்ந்து சி.ஸ் அமுதன் தனது அடுத்த படைப்பை நடிகர் மற்றும் இசையமைப்பாளர் விஜய்  ஆன்டனி வைத்து இயக்குகிறார் என்ற செய்தியும் வெளிவந்தது. சமீபத்திய அப்டேட் என்னவென்றால்,  விஜய் ஆண்டனி சிவகார்த்திகேயன் போன்ற படங்களை செய்ய விரும்புகிறார் . மேலும், விஜய் ஆண்டனி காதல் திரைப்படங்களில் நடிக்க விரும்புகிறார், தன்னை அணுகும் இயக்குநர்கள் நல்ல காதல் கதை திரைப்படங்கள் இருந்தால் என்னை தொடர்பு கொள்ளுங்கள் என்று அந்த பேட்டியில் குறிப்பிட்டு இருக்கிறார். நடிகர் சிவகார்த்திகேயன் போன்ற சுவாரஸ்யமான படங்களை செய்ய விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.