இர்ஃபான் சர்ச்சை
தொடர்ச்சியாக பல சர்ச்சைகளில் சிக்கி எந்த வித தண்டனையும் இல்லாமல் தப்பி விடுபவர் யூடியூபர் இர்ஃபான். ரம்ஜானை கொண்டாடும் விதமாக ஏழைகளுக்கு உடைகள் மற்றும் பணம் வழங்கப்போவதாக, தனது மனைவி மற்றும் ஒரு உதவியாளருடன் இர்ஃபான் காரில் சென்றுள்ளார். அப்போது சாலையோரம் இருந்த சிலருக்கு பொருட்களை வழங்கியுள்ளார். இதனை கண்டதும் அங்கிருந்தவர்கள் முண்டியடித்துக்கொண்டு பொருட்களை வாங்க முயன்றுள்ளனர். இதனால் ஆவேசமடைந்தவர் பொதுமக்களை நோக்கி சத்தமிட்டு அங்கிருந்து நகர்ந்துள்ளார். இந்த சம்பவங்கள் அனைத்தையும் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார். அதில், ஆடைகளுக்காக முண்டியடித்தவர்களை மோசமானவர்களை போல பேக்ரவுண்ட் மியூசிக் எல்லாம் போட்டு பில்டப் செய்துள்ளார். மேலும், “அசிங்கமாக இருப்பதாகவும், என் பொண்டாட்டியை இழுத்துச் சென்றுவிடுவார்கள் போல, நான் காப்பாற்றிக் கொண்டேன்” என்றெல்லாம் பேசியுள்ளார்.
இர்ஃபானை வெளுத்த விஜே பாரு
இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பலர் இர்ஃபானை கண்டபடி விமர்சிக்க தொடங்கியுள்ளார்கள். பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளரான விஜே பாருவும் இர்ஃபானை விமர்சித்து வீடியோ வெளியிட்டிருந்தார். 'இவரு பெரிய மன்னர் பரம்பரை மனைவி மேல் அவ்வளவு அக்கறை இருந்தால் மனைவியை வீட்டிலேயே வீடு வர வேண்டியதுதானே' என பாரு தெரிவித்திருந்தார். இந்த வீடியோவை பலர் ஷேர் செய்தார்கள்.
இர்ஃபான் மன்னிப்பு
தனது வீடியோ சர்ச்சையானதைத் தொடர்ந்து மன்னிப்பு கேட்டு ஃஇர்பான் வீடியோ வெளியிட்டார். ரம்ஜான் அன்று மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று நினைத்ததாகவும் ஆனல் சூழ நிலையை சமாளிக்க தெரியாததால் கோபத்தில் வார்த்தை பேசிவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்". இர்ஃபானின் மன்னிப்பு வீடியோ எந்த வித மாற்றத்தையும் ரசிகர்களிடம் ஏற்படுத்தவில்லை. அந்த சூழலில் அப்படி நடந்தது என்றால் இந்த வீடியோவை எடிட் செய்து போடும் வரை தான் பேசியதை நீக்க வேண்டும் என தோன்றவில்லையா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.
ரவுண்டுகட்டி அடிக்கும் விஜே பாரு
இர்ஃபானை விமர்சித்து வீடியோ வெளியிட்ட விஜே பாரு தற்போது தனது எக்ஸ் பக்கத்தில் இர்ஃபான் பற்றி பதிவிட்டுள்ளார். இதில் " இந்த மாதிரியான ஒரு நபருடன் ஏன் நடிகர்கள் நேர்காணல் செய்கிறார்கள். எந்த வித தயாரிப்பும் இல்லாமல் தனது பிராண்டை மட்டுமே ப்ரோமோட் செய்பவர் இர்ஃபான். அறத்தை பின்பற்றாத ஒரு நபரின் நேர்காணலில் ஏன் கலந்துகொள்ள வேண்டும் " என விஜே பாரு கேள்வி எழுப்பியுள்ளார்