வால் கில்மர் மரணம்
1984 ஆம் ஆண்டு வெளியான டாப் டீக்ரெட் படத்தில் நாயகனாக அறிமுகமானவர் வால் கில்மர். டாப் கன் , தி டோர்ஸ் , பேட்மேன் ஃபோரெவர் போன்ற படங்களில் நடித்து தனக்கென ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருந்தார் வால் கில்மர். தி டோர்ஸ் படத்தில் இவர் நடித்த ஜிம் மாரிசன் கதாபாத்திரம் அனைவராலும் பாராட்டப்பட்டது. 1980 முதல் 1990 காலக்கட்டத்தில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்த வால் 80 க்கு மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவரது வாழ்க்கையை மையமாக வைத்து வால் என்கிற ஆவணப்படமும் வெளியாகியுள்ளது. பல வருடங்களாக புற்று நோயுடன் போராடி வந்த கில்மர் வால் கில்மர் தனது 65 ஆவது வயதில் இன்று ஏப்ரல் 2 ஆம் தேதி உயிரிழந்ததாக அவரது மகள் தகவல் தெரிவித்துள்ளார். அவரது இறப்புக்கு திரை பிரபலங்கள் அஞ்சலி செல்த்தி வருகிறார்கள்.
வால் கில்மர் நடித்த சிறந்த காட்சிகளை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் பகிர்ந்து தங்கள் வருத்தத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.