Karthigai Deepam: கார்த்தியை மதிக்காத ரேவதி! மகேஷை வறுத்தெடுத்த சாமுண்டீஸ்வரி - சூடுபிடிக்கும் கார்த்திகை தீபம்
Karthigai Deepam Serial: கார்த்திகை தீபம் சீரியலில் கார்த்தியிடம் ரேவதி வெறுப்பை காட்டும் நிலையில், சாமுண்டீஸ்வரி மகேஷிடம் கோபத்தை காட்டுகிறாள்.

Karthigai Deepam: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் ரேவதி கோவிலுக்கு வந்த நிலையில் இன்று நடக்கபோவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
மெட்டி போடும் கார்த்தி:
அதாவது, கார்த்திக் ரேவதியை தொடர்ந்து சாமுண்டீஸ்வரியும் கோவிலுக்கு வர அதை பார்த்ததும் அபிராமி மற்றும் பரமேஸ்வரி என இருவரும் மறைந்து கொள்கின்றனர். கோவிலில் சாமி கும்பிட்டதும் சாமுண்டீஸ்வரி கார்த்தியிடம் ரேவதி காலில் மெட்டி போட்டு விட சொல்ல, ரேவதி வேண்டா வெறுப்பாக காலை காட்ட கார்த்திக் மெட்டி போடுகிறான்.
Just In




அடுத்து இவர்களை வீட்டிற்கு அனுப்பி விட்டு சாமுண்டீஸ்வரி நேராக குடோனுக்கு வருகிறாள். அங்கு மகேஷ் அடைத்து வைத்திருக்க அவன் சாமுண்டீஸ்வரியை பார்த்ததும் என்னை காப்பாத்துங்க என சத்தம் போடுகிறான்.
கேடுகெட்டவன் நீ:
சாமுண்டீஸ்வரி நீ கேடுகெட்டவன் என தெரிந்து தான் அடைத்து வைத்திருக்கேன்.. கொஞ்ச நாளைக்கு அமைதியா இரு, நானே விட்டுடுறேன் என்று சொல்லி கிளம்பி வருகிறாள்.
இங்கே கார்த்திக் ரேவதி ஆகியோர் வீட்டு வாசலில் காத்திருக்க சாமுண்டீஸ்வரி வந்ததும் ஆரத்தி எடுத்து உள்ளே அழைக்கின்றனர். அரிசி படியை தட்டிவிட்டு வலது கால் எடுத்து வைத்து உள்ளே வர சொல்ல ரேவதி முடியாது என மறுத்து உள்ளே செல்கிறாள்.
இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.