விஜே மணி மேகலை மற்றும் பாலா தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று பிரபலமடைந்தவர்கள். இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு நிகழ்ச்சியொன்றை தொகுத்து வழங்குவதற்காக இவர்கள் இருவரும் சென்றுள்ளனர்.


இந்நிலையில் மணிமேகலை விஜய்யின் லியோ படத்தில் இடம் பெற்றிருக்க கூடிய நாடி ரெடி பாடலுக்கு ரீல்ஸ் செய்து, அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது : “அமெரிக்காவில் அதிக பட்ஜெட் டான்ஸ் ரீல்ஸ் வாரணம் ஆயிரம் திரைப்பட ஸ்பாட் லா லியோ பாடல் ரீல்ஸ். கோல்டன் கேட், சான்பிரான்சிஸ்கோ”. என பதிவிட்டுள்ளார். இந்த ரீல்ஸ் அதிக லைக்ஸ் மற்றும் கமெண்டுகளை பெற்று வருகிறது. இந்த ரீல்ஸை பார்த்த ரசிகர் ஒருவர் வாவ் என்ன ஒரு எனெர்ஜி வேற லெவல் என பதிவிட்டுள்ளார். 







இதற்கிடையே மணிமேகலை, பாலா இருவரும் நடுரோட்டில் தட்டும் கையுமாக இந்திய சாப்பாடு வாங்கி சாப்பிடுகிறார்கள். அங்குள்ள பன், பீட்ஸா எல்லாம் ஒரு நாளைக்கு மேல் நமக்கு செட்டாகாது. நம்ம ஊர் சாம்பார் சாதம் எங்கே இருக்குன்னு தேடிப்பிடித்து பிச்சை எடுத்து நாங்க ரெண்டு பேரும் இப்படி ரகசியமா குத்தவச்சு உட்கார்ந்து சாப்பிட்டுக்கிட்டு இருக்கோம் என மணிமேகலை பேசிய வீடியோ வேகமாக பகிரப்பட்டு வருகிறது. அந்த வீடியோவில் மணிமேகலையும், பாலாவும் தங்களை தாங்களே ஜாலியாக கலாய்த்து கொள்கின்றனர். 






மேலும் படிக்க


Colombia Plane Collision: அய்யய்யோ..! நடுவானில் மோதிக்கொண்ட விமானங்கள், கொளுந்துவிட்டு எரியும் வீடியோ வைரல்..2 பேர் பலி


Manipur: ஓயாத கலவரம்.. மணிப்பூரில் மீண்டும் வெடித்த வன்முறை; துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழப்பு