விஜய் டிவியில் பிரபலமாக ஒளிரப்பாகும் தொடர்களில் ஒன்றான ராஜா ராணி 2(Raja Rani 2), அதிக பார்வையாளர்களை கொண்டதாகவும். ஏற்கனவே ராஜா ராணி தொடர் வெற்றி பெற்றதை தொடர்ந்து, அதன் தொடர்ச்சியாக தான் இந்த தொடர் தொடங்கப்பட்டது. முதல் பாகத்தை போலவே இரண்டாம் பாகமும் நல்ல வெற்றி பெற்றதுடன், ரசிகர்களின் ஆதரவும் பெற்றது.




பொதுவாக சீரியல்களில் ஹீரோ, ஹீரோயினை விட, வில்லி அல்லது வில்லன்களுக்கு தான் அதிக மவுசி மற்றும் ரசிகர் கூட்டம். அந்த வகையில் ராஜா ராணி சீரியலின் 2 ம் பாகத்தின் வில்லியாக உள்ள ஆர்.ஜே. அர்ச்சனா, அழகான ராட்சசியாக கலக்கி வந்தார். அந்த சீரியலில் ஐக்கானாகவும் அவர் தொடர்ந்தார்.


அர்ச்சனாவின் கதாபாத்திரத்தை பாராட்டி அவருக்கு விஜய் டெலி அவார்ட்ஸ் வழங்கப்பட்டது. அதுமட்டுமின்றி கலாட்டா நிறுவனத்தின் விருதும் வழங்கப்பட்டது. அந்த அளவிற்கு ராஜா ராணி 2 சீரியலின் தூணாக இருந்த அர்ச்சனா(Archana), அந்த தொடரில் இருந்து விலகியுள்ளார். 


தொகுப்பாளினியாக இருந்து பின் சீரியல் நடிகையாக களமிறங்கியவர் அர்ச்சனா. தொகுப்பாளினியாக இருந்ததை விட நடிகையான பிறகு தான் மக்களுக்கு நன்கு பரீட்சயப்பட்ட பிரபலம் ஆனார்.


விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி 2 தொடரில் படு மோசமான வில்லியாக நடித்து வந்தார். அதனாலேயே ரசிகர்கள் பலரும் அவரை திட்டி வந்தார்கள். ஆனால் அவரோ சீரியலை வெறும் சீரியலாக பாருங்கள் என்று கூறி வந்தார்.


 






அதற்கான காரணத்தை தற்போது ஒரு நேர்காணலில் கூறியுள்ளார் அர்ச்சனா : 


இந்த நிலையில் அவர் ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில் அவர் பேசும்போது, ராஜா ராணி 2 தொடரில் 3 ஆண்டுகளுக்கு மேல் நடித்துவிட்டேன், எனது வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு செல்ல முடிவு செய்து இதில் இருந்து விலகினேன்.


நான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்வது உண்மையா, இல்லையா என்பது வரும் நாட்களில் தெரியும், பொறுத்திருந்து பாருங்கள் என கூறியுள்ளார்.