விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரியின் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் மார்ச் 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் வெளியானது முதலே பல்வேறு சர்ச்சைகளை எதிர்க்கொண்டது. காஷ்மீரில் 1990-களில் நடந்த தீவிரவாத தாக்குதல்களில் பாதிக்கப்பட்ட இந்து பண்டிட்களின் வலியுணர்வை வெளிப்படுத்தும் விதமாக இருக்கிறது என ஒரு தரப்பினரும் ..இல்லை இது வெறும் இஸ்லாமிய விரோதப்போக்கு என மற்றொரு தரப்பினரும் கூறி வந்தனர்.





 அனுபம் கெர், பல்லவி ஜோஷி, தர்ஷன் குமார் மற்றும் மிதுன் சக்ரவர்த்தி ஆகியோர் நடித்துள்ள இப்படம் பலரின் கவனத்தை ஈர்த்தது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.  படம் 340.92 கோடிகளை வசூலித்ததாக செய்திகள் வெளியானது.







இந்த நிலையில்  காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் IFFI 2022  அதாவது சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வாகியுள்ளது.  முன்னதாக சியாட்டில் திரைப்பட விழா 2022' மற்றும் 'விழிப்புணர்வு திரைப்பட விழா' ஆகியவற்றிற்கும் இப்படம் தேர்வாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. இது குறித்து இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து “"இந்திய பனோரமாவில் IFFI 2022 இல் #TheKashmirFiles தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.






இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு  இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி , ‘டெல்லி ஃபைல்ஸ்’ என்னும் பெயரில் தனது அடுத்த படத்தை இயக்கவுள்ளார். இது குறித்த அறிவிப்பை அவர் அண்மையில் வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.