விஷ்ணு விஷால் மற்றும் ஜூவாலா கட்டா தம்பதியினருக்கு இப்போது 2ஆவது பெண் குழந்தை பிறந்துள்ளது.வெண்ணிலா கபடி குழு படம் மூலமாக தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் நடிகர் விஷ்ணு விஷால். இந்தியா தொடர்ந்து, பலே பாண்டியா, துரோகி, குள்ளநரி கூட்டம், நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, ஜீவா, ராட்சசன் என்று ஏராளமான படங்களில் நடித்துள்ளார். கடைசியாக லால் சலாம் படத்தில் நடித்திருந்தார். 

ஆரம்பத்தில் இருந்தே தொடர்ந்து நல்ல கதைக்களம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார் விஷ்ணு விஷால். மேலும் நீர் பறவை படத்தில், துணை இயக்குனராக பணியாற்றிய துணை இயக்குனரும் தன்னுடைய தோழியான இயக்குனர் நட்ராஜின் மகள் ரஜினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக, 2018-ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தார்.

இதை தொடர்ந்து பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவை கடந்த 2021-ஆம் ஆண்டு ஏப்ரல் 22-ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார்.  ஏற்கனவே ரஜினி மூலம் விஷ்ணு விஷாலுக்கு ஆரியன் என்கிற ஆண் குழந்தை உள்ள நிலையில், தற்போது ஜுவாலா கட்டா மற்றும் விஷ்ணு விஷாலுக்கு பெண் குழந்தை பிறந்த தகவலை அறிவித்துள்ளார்

இது குறித்து விஷ்ணு விஷால் தனது எக்ஸ் தள பக்கத்தில் குழந்தை பிறந்த புகைப்படத்தை பகிர்ந்து எங்களுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. ஆர்யன் இப்போது மூத்த சகோதரனாகிவிட்டான். இன்று எங்களுக்கு 4ஆவது ஆண்டு திருமணம் நாள். அதே நாளில் எங்களுக்கு மகள் பிறந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. உங்களது அன்பும், ஆசியும் எங்களுக்கு தேவை என்று பதிவிட்டுள்ளார். இதை தொடர்ந்து வாழ்த்துக்களும் இவருக்கு குவிந்த வண்ணம் உள்ளது.