புனீத் ராஜ்குமார் கன்னடத் திரையுலகத்தில் அனைவராலும் நேசிக்கப்பட்டவர். ’A Man with no haters’ என்கிறது அவரை அறிந்த வட்டாரங்கள். 2002ம் ஆண்டு கன்னடத் திரையுலகில் அப்பு திரைப்படம் மூலம் அறிமுகமானார் புனீத் ராஜ்குமார். இதுவரை 29 படங்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கடந்த ஆண்டு மாரடைப்பால் இறந்தார். நடிகர் புனீத் ராஜ்குமாரின் மரணம் என்பது கன்னடத் திரையுலகம் மட்டுமல்ல ஒட்டுமொத்த கர்நாடகத்தாலுமே ஏற்றுக்கொள்ள முடியாததாகத்தான் இருந்தது. 






ஒரு நடிகர் மட்டுமல்லாமல் இவர் நிறைய சமூக சேவைகளும் செய்து வந்தார். ஆதரவற்றோர் இல்லம், உறுப்பு தானம் என பல சேவைகள் செய்து வந்தார். சமீபத்தில் நடிகர் விஷால் மைசூரில் உள்ள இவரது சக்திதாமா ஆசிரமத்திற்கு சென்றள்ளார்.






அப்போது அங்கிருந்த குழந்தைகளிடம் சிரித்து பேசி நேரம் செலவழித்துள்ளார். குழந்தைகளின் சிரிப்பில் நாம் இறைவனை காண்போம் என்று அவர் கூறியுள்ளார். மேலும் புனீத் ராஜ்குமார் குடும்பத்தாரின் இந்த செயல் மதிப்பிற்குரியது. மேலும் இந்த ஆசிரமத்திற்கு உதவுவதற்கு தான் முன் வருவதாகவும் தன்னை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும்  ராஜ்குமார் குடும்பத்தாரிடம் கேட்டுக் கொள்வதாக கூறியுள்ளார் நடிகர் விஷால்.