தமிழ் சினிமாவின் ஆக்ஷன் ஹீரோ விஷால் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான 'மார்க் ஆண்டனி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தாலும் வசூல் ரீதியாக 100 கோடி வசூலித்ததாக கூறப்படுகிறது. அதன் வெற்றியை தொடர்ந்து தற்போது ஹரி இயக்கத்தில் 'ரத்னம்' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் நடிகர் விஷால். ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் மற்றும் ஜி ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் பிரியா பவானி ஷங்கர், சமுத்திரக்கனி,கௌதம் மேனன், யோகி பாபு மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.


 



நடிகர் விஷால் சமீப காலமாக சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாகி வருகிறார். அந்த வகையில் வெளிநாட்டில் இளம் பெண் ஒருவருடன் விஷால் காணப்பட்டதும் அவரை வீடியோ எடுக்கிறார்கள் என தெரிந்ததும் தலைதெறிக்க ஓடும் வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் மிகவும் வைரலானது. கடைசியில் அது வெறும் பிராங்க்  என தகவல்கள் வெளியாகின.  


அதேபோல டாஸ்மாக் கடை வெளியில் நீண்ட வரிசையில் நின்று கொண்டு இருந்தவர்களை விஷால் விரட்டி அடிக்கும் வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாகி வருகிறது. அதில் விஷால் ஒருவரிடம் சென்று "ஏற்கனவே போதையில் இருக்க? இதுல சரக்கா? இது என்னனு நினைச்ச நீ?" என அந்த போதை அசாமியிடம் கேட்க அவன் "டாஸ்மாக்" என சொல்ல "அட லூசு, இது ரத்னம் படத்தோட செட்.. போய்யா போ போ" என அங்கிருந்த அனைவரையும் விரட்டி அடித்து "டாஸ்மாக்குனு பேர் போட்டாலே வந்து நிக்கிறது" என விஷால் சொல்லும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.  


 



இந்த வீடியோவை பார்க்கும் போதே படத்தோட ஷூட்டிங் என்பது தெள்ள தெளிவாக தெரிகிறது. இருப்பினும் சமூக வலைத்தளங்களில் இது பகிரப்பட்டதால் விஷால் நியாயம், தர்மத்திற்காக குரல் கொடுக்கிறார். சமூகத்தில் நடக்கும் அவலங்களை தட்டி கேட்கிறார் ஆஹா ஓஹோ என பாராட்டி தள்ளி விமர்சனங்களை கொடுத்து வருகிறார்கள். 


 






 


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 'ரத்னம்' படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டது ரத்னம் படக்குழு. அதன் தொடர்ச்சியாக ரத்னம் படத்தின் விளம்பரத்துக்காக குடிமகன்களை, விஷால் ட்ரோல் செய்வது போல வெளியான இந்த வீடியோ சோசியல் மீடியாவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வைரலாக பகிரப்பட்டு வருகிறது.  


அவ்வப்போது இப்படி ஏதாவது ஓன்றை செய்து மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காகன டெக்னிக் இது. என்றுமே அவர்களை பற்றின செய்தி மக்கள் மத்தியில் இருந்து கொண்டே இருக்க வேண்டும். இல்லையென்றால் மக்கள் மறந்து விடுவார்கள்.