விஷால் நடிப்பில் உருவாகியுள்ள மதகஜராஜா படம் வரும் 12ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இயக்குநர் சுந்தர் சி இயக்கிய இந்தப் படம் 12 ஆண்டுகளுக்கு பிறகு திரைக்கு வருகிறது. இந்த நிலையில் தான் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில், மதகஜராஜா படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் விஷால், சுந்தர் சி, குஷ்பு, விஜய் ஆண்டனி உள்பட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர். 


அப்போது தான் விஷாலுக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டது அனைவருக்கும் தெரியவந்தது. அந்த நிகழ்ச்சியில் விஷல் உடல் எடை மெலிந்து இருந்ததோடு கை நடுக்கத்துடன் பேசினார். இதையடுத்து அவர் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், அதோடு தான் இந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார் என்றும் கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து விஷால் தனியார் மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் என செய்திகள் ஒருபுறம் பரவிய நிலையில் இந்த தகவலை விஷாலின் மேலாளர் ஹரிகிருஷ்ணன் மறுத்தார். 



Vishal Health: விஷாலின் இந்த நிலைக்கு அவரு தான் காரணம்: குடிப்பழக்கம் கிடையாது: விஷாலின் நண்பர் ராஜா கண்ணீர்!


இந்த நிலையில் தான் விஷாலின் உடல்நிலை குறித்து பலரும் பலவிதமான கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். ஏற்கனவே விஷாலுக்கு குடிப்பழக்கம் இருந்தது குறித்து ஆர்யா பேசிய வீடியோ ஒன்றும் வைரலானது. இப்போது அவரது நண்பரும் தயாரிப்பாளருமான ராஜா ஒரு பேட்டியில் விஷால் பற்றி பேசியுள்ளார். விஷாலை இப்படி பார்க்கும் போது அழுகையே வருகிறது. எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர். நான் தயாரிப்பாளராக இருக்க அவர் தான் காரணம். இன்று அவர் இப்படி இருக்க பாலா தான் காரணம். அதுவும் அவன் இவன் படத்தில் அவருக்கு ஒன்றரை கண்ணை தைத்ததால் வந்த தலைவலி பிரச்சனை தான் காரணம். 


அவர் தலைவலியில் துடித்து வந்ததை நான் பார்த்திருக்கிறேன். அதற்கெல்லாம் பாலா தான் காரணம். முதலில் விஷாலின் ரசிகன் நான். அதன் பிறகு தான் நண்பர். விஷாலிடம் பேச முயற்சித்தும் பேச முடியாமல் போய்விட்டது. ஏனென்றால் அவருக்கு உடல்நிலை சரியில்லை. இதற்காக தான் அவர் வெளிநாட்டில் சிகிச்சையும் எடுத்து வந்தார். எனினும் சரியானதாக தெரியவில்லை. விஷாலின் இந்த பிரச்சனை குறித்து மருத்துவர்களிடம் பேச இருக்கிறோம். பிரச்சனையை தெரிந்து கொண்டு எங்கிருந்து ஆரம்பித்ததோ அதற்குரியவர்கள் மீது வழக்கு தொடர திட்டமிட்டுள்ளோம். பாலா படத்தில் நடிக்க வேண்டாம் என்று கூட நான் சொன்னேன் அவர் கேட்கவில்லை.




இந்த படத்துக்காக விஷாலின் கண்கள் இழுத்து தைக்கப்பட்டது. விஷாலிடம் என்ன சொன்னாலும் அவர் கோவப்பட மாட்டார் சிரித்துக் கொண்டே கடந்து செல்வார். அவன் இவன் படத்திற்காக விஷால் எந்தளவிற்கு கஷ்டப்பட்டார் என்று எல்லோருக்கும் தெரியும். அவருக்கு குடிப்பழக்கம் இருப்பதாக சொல்றாங்க. அதெல்லாம் கிடையாது. தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுவார். அப்படி இருக்கும் ஒருவர் குடிக்கு அடிமையானதாக சொல்வதை ஏற்க முடியாது என்று கண்ணீருடன் ராஜா இந்த பேட்டியில் பேசியுள்ளார்.