சேது படம் மூலமாக இயக்குநராக அவதாரம் எடுத்தவர் இயக்குநர் பாலா. 1999 ஆம் ஆண்டு, விக்ரம் நடித்த 'சேது' படம் திரைக்கு வந்தது. பாலா திரைக்கு வந்து 25 ஆண்டுகள் நிறைவு செய்ததைத் தொடர்ந்து 'வணங்கான்' படத்தின் இசை வெளியீட்டு விழாவும் - பாலா 25 விழாவையும் சென்னை நந்தம்பாக்கத்தில் ஒன்றாக நடத்தி இயக்குனர் பாலாவை பெருமை படுத்தினர். இந்நிகழ்ச்சியில் வணங்கான் படக்குழுவினர் உள்பட பல இயக்குநர் பலரும் கலந்து கொண்டனர்.


இயக்குநர் மிஷ்கினும் கலந்து கொண்டார். அப்போது பேசிய மிஷ்கின்... "இயக்குநர் பாலா பற்றியும், அவருடனான நட்பு பற்றியும் பகிர்ந்து கொண்டார். இன்றைய நாள் ரொம்பவே முக்கியமான நாள். சினிமா என்றால் என்ன என்பது பற்றி ராஜீவ் மேனன் சொன்ன விஷயம் புரியவைத்தது. அவர் ஒரு ஸ்டூடியோவிற்கு சென்றிருந்தார். அந்த ஸ்டூடியோவிற்கு வெளியில் கழற்றிவிடப்பட்டிருந்த 30 செருப்புகளுக்கு நடுவில் ஒருவர் படுத்திருந்தார். அவர் யார் என்று கேட்க, ஏதோ ஒரு படத்தோட இயக்குநர் என்று சொல்லியிருக்கிறார்கள். 




30 செருப்புக்கு நடுவே பரிதாபமாக படுத்து கிடந்த பாலா; மிஷ்கின் பகிர்ந்த வேதனை பகிர்வு!


அதற்கு ஏன் அவர் இங்கு படுத்திருக்கிறார் என்று கேட்டுள்ளார். அப்படி அங்கு படுத்திருந்தது வேறு யாரும் அல்ல  சேது படத்தை கொடுத்த இயக்குநர் பாலா தான். அப்படி ஒரு தருணத்தை நான் மறக்க மாட்டேன். ஏனென்றால் ஒரு கலைஞன் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் தனது படைப்புக்காக இறங்கி போவான் என்று மிஷ்கின் கூறினார்.


தான் இயக்கிய 'ஓணாயும் ஆட்டுக்குட்டியும்' படத்தை பார்த்த பிறகு இயக்குநர் பாலா என்னை அழைத்து பேசினார். இருவரும் ஒன்றாக சேர்ந்து சரக்கு அடிச்சோம். எனக்கு படம் பண்ணுறியா என்று கேட்க, அப்படி நான் எடுத்த படம் தான் பிசாசு. அதன் பிறகு தான் மீண்டு வந்தேன். இதன் மூலம் எனக்கு மறு வாழ்க்கை கொடுத்தது பாலா அண்ணன் தான். அவருக்கு நான் கடமைப்பட்டுருக்கேன். பாலாவின் 25 ஆண்டு கால சினிமா வாழ்க்கையை பெரிய விழாவாக கொண்டாட வேண்டும் என்று நான் சொன்னேன். எப்படி ஒரு தாய் குழந்தையை பெற்றெடுக்கிறாளோ, அப்படி தான் ஒரு கலைஞனும் ஒவ்வொரு கலைஞனையும் பெற்றெடுப்பான். அப்படி பாலா பெற்றெடுத்தவன் நான் தான் என்று மிஷ்கின் பெருமையாக பேசியுள்ளார்.