பிக் பாஸ் தமிழ் சீசன் 8:


விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி, விறுவிறுப்பாக நடைபெற்ற வந்த நிலையில் இன்னும் ஓரிரு வாரங்களில் முடிய உள்ளது. இந்நிகழ்ச்சியின் தொடக்கத்தில் 18 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் எண்ட்ரி கொடுத்த நிலையில், அதன் பிறகு வைல்டு கார்டு எண்ட்ரி மூலமாக 6 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தனர். இதையடுத்து வாரம் தோறும் ஒரு போட்டியாளர்கள் என்று ஒவ்வொரு வாரமும் ஒவ்வொருவராக வெளியேற்றப்பட்டனர். கடந்த சில வாரங்களாக 2 போட்டியாளர்கள் அதிரடியாக வெளியேற்றப்பட்டு வருகிறார்கள்.


டிக்கெட் டூ ஃபினாலே:


இந்த நிலையில் தான் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியானது இறுதிகட்டத்தை எட்டி உள்ளது. நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக்கும் விதமாக மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு எலிமினேட் ஆகி வெளியே சென்ற 8 போட்டியாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். ரயான் டிக்கெட் டூ ஃபினாலே பெற்று நேரடியாக இறுதிப் போட்டிக்கு சென்றுவிட்டார். எனவே அவர் எலிமினே ஆக வாய்ப்பில்லை என்றாலும், மீதம் உள்ள 7 போட்டியாளர்கள் நிலை எப்போது வேண்டுமானாலும் மாறலாம்.



Bigg Boss Eviction: பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறப் போகும் போட்டியாளர் யார் தெரியுமா?


டைட்டில் வின்னர்:


டைட்டில் வின்னராகப் போகும் அந்த ஒரு போட்டியாளர் யாராக இருக்கும் என்ற ஆர்வமும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. ரசிகர்களின் கணிப்பு படி முத்துக்குமரன் தான் டைட்டில் வின்னராக வருவார் என்று பலர் கூறி வருகிறார்கள். எனினும் அருண், விஷால், பவித்ரா ஜாக்குலின், தீபக், சவுந்தர்யா ஆகியோரும் இன்னும் பிக் பாஸ் வீட்டிற்குள் இருப்பதால் அடுத்தடுத்த இடங்களை யார் பிடிப்பார் என்பது கணிக்க முடியாத  ஒன்றாக உள்ளது. 


இதில், சவுந்தர்யாவுக்கும் இரண்டாவது இடத்தை பிடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதே நேரம் உள்ளே வந்துள்ள 8 வைல்டு கார்டு மூலம் ஆட்டம் எப்படி மாற்றப்படும் என்பது தெரியவில்லை. இப்படி பல கேள்விகள் ரசிகர்கள் மனதில் இருந்தாலும், இந்த வாரம் உள்ளே வந்துள்ள வைல்டு கார்டு போட்டியாளர்கள் மூலம் மிட் வீக் எவிக்ஷன் நடக்கும் என எத்திவைக்கப்பட்டது. அப்படி எதுவும் இதுவரை நடக்காத நிலையில், இந்த வாரம் விஷால் அல்லது பவித்ரா வார இறுதியில் வெளியேற்றப்படலாம் என்பது நெட்டிசன்கள் கணிப்பு. இந்த கணிப்பு நிஜமாகுமா? வெயிட் பண்ணி பார்ப்போம்.