அமேசான் பிரைம் வீடியோவில் செப்டம்பர் 11 ரிலீசாகிறது 'விருமன்' திரைப்படம்

  


நடிகர் கார்த்தி நடிப்பில் "விருமன்" திரைப்படம் செப்டம்பர் 9ம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் திரையிடப்படுகிறது என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர். ஆகஸ்ட் 12ம் தேதி திரையரங்குகளில் கோலாகலமாக வெளியிடப்பட்டு பிளாக் பஸ்டர் ஹிட்டாகி ஒரு மாதம் கழித்து ஓடிடியில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.   



 


டிஜிட்டல் பிரீமியர் காட்சிக்கு தயார்:


எம். முத்தையா இயக்கத்தில் 2டி என்டர்டெயின்மென்ட் பேனரின் கீழ்  சூர்யா தயாரித்துள்ள "விருமன்" திரைப்படத்தில் நடிகர் கார்த்தி மற்றும் அதிதி ஷங்கர் நடித்திருந்தனர். இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் இப்படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார். இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வரவேற்பை பெற்று பிளாக் பஸ்டர் ஹிட் படமாகி வணிக ரீதியாக நல்ல வசூலை ஈட்டியுள்ளது. தற்போது இப்படம் டிஜிட்டல் பிரீமியர் காட்சிக்கு தயாராகியுள்ளது. இது அமேசான் பிரைம் வீடியோவில் செப்டம்பர் 11ம் தேதியன்று வெளியிடப்படும் என அறிவிப்பை வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர். இது ஒரு முழுக்க முழுக்க எண்டர்டெயின்மெண்ட் படமாக ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. 


 


 






 


ஆஹா ஓடிடியிலும் விருமன்: 


மேலும் கார்த்தியின் 'விருமன்' திரைப்படம் உலகளவில் ஓடிடி தளமான ஆஹா தமிழ் டிஜிட்டல் தளத்திலும் வெளியாக உள்ளது என்ற அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது ஆஹா தமிழ். முத்தையாவும் கார்த்தியும் சேர்ந்தாலே ஆஹான்னு சொல்லுவாங்க அப்போ ஆஹால சேர்ந்தா... என்ற ஒரு பதிவையும் கார்த்தியின் புகைப்படத்தோட வெளியிட்டுள்ளது ஆஹா தமிழ். இந்தியா, சீனா தவிர பிற நாடுகளில் செப்டம்பர் 11 தேதி முதல் ஆஹா தமிழ் தளத்தில் வெளியாக உள்ளது விருமன் திரைப்படம். 


 






 


அப்போ கொம்பன் - இப்போ விருமன் :
 
'விருமன்' திரைப்படம் நடிகர் கார்த்தியின் திரை வாழ்வில் ஒரு வெற்றி படமாக அமைந்துள்ளது. 'கொம்பன்'  திரைப்படத்திற்கு பிறகு எம். முத்தையா - கார்த்தி கூட்டணியில் உருவாகியுள்ளது இப்படம். பிரகாஷ்ராஜ், ராஜ்கிரண், சூரி உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் யுவன் ஷங்கர் ராஜா. 


பொன்னியின் செல்வன் ரிலீஸ்காக வெயிட்டிங் :


நடிகர் கார்த்தி 'விருமன்' படத்தின் வெற்றியை தொடர்ந்து மணிரத்னதின் இயக்கத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன்' வெளியிட்டிற்காக ஆவலுடன் காத்து கொண்டு இருக்கிறார். இப்படத்தில் வந்திய தேவன் எனும் முக்கியமான கதாபத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் செப்டம்பர் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.