இயக்குனர் முத்தையா இயக்கத்தில், நடிகர் கார்த்தியின் நடிப்பில் வெளியான "விருமன்" திரைப்படத்தின் 75 நாள் கொண்டாட்டமான இன்று போஸ்டருடன் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தது 2டி எண்டர்டைன்மெண்ட் நிறுவனம்.
தமிழ் சினிமாவில் கிராமத்து கதைக்களத்தை மையமாக வைத்து படம் எடுப்பதில் வல்லவரான இயக்குனர் முத்தையா படங்களுக்கு கிராமத்து ஆடியன்ஸ் மத்தியில் நல்ல வரவேற்பு எப்போதுமே உண்டு. குட்டிப்புலி, கொம்பன், மருது, கொடி வீரன், தேவராட்டம், புலிக்குத்தி பாண்டி போன்ற பல படங்களை தொடர்ந்து மீண்டும் ஒரு கிராமத்து கதையை கையில் எடுத்த இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் இந்த ஆண்டு வெளியான திரைப்படம் "விருமன்".
பாக்ஸ் ஆபிஸ் ஹிட் :
‘2டி எண்டர்டைன்மெண்ட்’ நிறுவனத்தின் சார்பில் நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து தயாரித்த இப்படம் மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது பாக்ஸ் ஆபிஸ் ஹிட் திரைப்படமாக வெற்றி பெற்றது. இப்படத்தின் நடிகர் கார்த்தியின் ஜோடியாக இயக்குனர் ஷங்கர் மகள் அதிதி ஷங்கர் ஹீரோயினாக அறிமுகமாகி இருந்தார். யுவன் ஷங்கர் ராஜா இசையில் பாடல்கள் அனைத்துமே சூப்பர் ஹிட்.
75ம் நாள் கொண்டாட்டம் :
ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற "விருமன்" திரைப்படத்தின் 75 நாள் கொண்டாட்டமாக இன்று ஒரு போஸ்டரை வெளியிட்டு ரசிகர்கள் அனைவருக்கும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது 2டி எண்டர்டைன்மெண்ட் நிறுவனம்.
கார்த்தியின் திரைவாழ்வில் முக்கியமான ஆண்டு :
ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் கோலாகலமாக வெளியான விருமன் திரைப்படம் திரையரங்குகளில் சரியான வசூல் வேட்டையை அள்ளிய பிறகு செப்டம்பர் 9ம் தேதி முதல் அமேசான் பிரைம் வீடியோவில் திரையிடப்பட்டு வருகிறது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வரவேற்பை பெற்றது இந்த என்டர்டெயின்மென்ட் திரைப்படம். இந்த ஆண்டு நடிகர் கார்த்தியின் திரை பயணத்தில் ஒரு மறக்க முடியாத ஆண்டாக அமைந்துள்ளது. விருமன் படத்தின் வெற்றியை தொடர்ந்து வந்தியத்தேவனாக நடிகர் கார்த்தி நடித்த பொன்னியின் செல்வன் திரைப்படம் மற்றும் இரண்டு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்த சர்தார் என இந்த ஆண்டு முழுவதும் வெற்றி படங்களாக குவித்து வருகிறார் கார்த்தி. மேலும் சர்தார் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது என்ற தகவலும் தற்போது வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது கார்த்தியின் ரசிகர்கள் மத்தியில் இகுந்த சந்தோஷத்தையும் எதிர்பார்ப்பையம் கொடுத்துள்ளது.