பான் இந்திய திரைப்படமாக வெளியாகிய பாலிவுட் திரைப்படமான "ராம் சேது" 2022 ஆண்டின் இரண்டாவது மிக பெரிய பாலிவுட் ஹிட் திரைப்படமாக வெற்றி பெற்றுள்ளது எனும் மகிழ்ச்சியான தகவலை வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர். 


 



 


அமோக வெற்றி :


லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், அபிஷேக் சர்மா இயக்கத்தில்அக்‌ஷய் குமார், ஜாக்குலின் பெர்னாண்டஸ் மற்றும் நுஷ்ரத் பாருச்சா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள "ராம் சேது" திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. தீபாவளி ரிலீஸாக வெளியான இப்படம் முதல் நாளே வசூல் வேட்டையை தொடங்கியது. இந்த ஆண்டு அக்ஷய் குமார் நடிப்பில் வெளியான பச்சன் பாண்டே, சாம்ராட் பிருத்விராஜ் மற்றும் ரக்ஷா பந்தன் ஆகிய மூன்று படங்களும் தோல்வி பெற்ற நிலையில் இந்த தீபாவளிக்கு வெளியான "ராம் சேது" திரைப்படத்திற்கு கிடைத்துள்ள அமோகமான வரவேற்பால் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளார் நடிகர் அக்ஷய் குமார்.


 






 


எங்கும் ஹவுஸ்ஃபுல் காட்சிகள் :


திரையரங்குகளில் வெளியான "ராம் சேது" திரைப்படத்தின் முதல் நாள்  மட்டுமே 15 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது எனும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இப்படம் ராஜஸ்தான், உத்தரபிரதேசம், பீகார், குஜராத், சௌராஷ்டிரா, மும்பை உள்ளிட்ட இடங்களிலும் சிறப்பான வசூலை ஈட்டியுள்ளது. பாலிவுட்டின் பெரிய நட்சத்திரங்களின் படங்கள் கூட இந்த ஆண்டு எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அந்த வகையில் இந்த ஆண்டு பாலிவுட் சினிமாவிற்கு மிக பெரிய ஓப்பனிங் கொடுத்த திரைப்படங்களின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியான 'பிரம்மாஸ்திரா' திரைப்படம். அதனை தொடர்ந்து 15 கோடிக்கு மேல் வசூலித்து இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது தீபாவளி ரிலீஸாக வெளியான "ராம் சேது" திரைப்படம். இதற்கு முன்னர் அக்ஷய் குமார் நடிப்பில் வெளியான 'ரக்ஷா பந்தன்’ திரைப்படத்தை காட்டிலும் இது இரண்டு மடங்கு வசூலாகும். இந்த ஆண்டு வெளியான திரைப்படங்களில் இரண்டாவது இடத்தில் இதுவரையில் இருந்த பூல் புலையா 2 படத்தின் வெற்றியை முறியடித்து முன்னேறியுள்ளது "ராம் சேது" திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.