கிரிக்கெட் வீரர்கள் பெரும்பாலானோர் பாலிவுட் நட்சத்திரங்களுடன் கிசுகிசுக்கப்படுவது வழக்கமான ஒன்று. ஏராளமான கிரிக்கெட் பிரபலங்களுக்கு அப்படி பரவிய கிசுகிசு பின்னர் திருமணத்தில் முடிந்தது. அந்த ஜோடி தான் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர நாயகன் விராட் கோலி - அனுஷ்கா சர்மா ஜோடி. 


 



கிசுகிசு டூ டும் டும் டும் :
 
இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவானாக கொண்டாடப்படும் விராட் கோலி இந்திய அணியின் வெற்றிக்கு பல சமயங்களில் உறுதுணையாய் இருந்துள்ளார். 2015ம் ஆண்டு பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா உடன் விராட் கோலி டேட்டிங் செய்து வந்ததாக வதந்திகள் காட்டுத்தீ போல எங்கும் பரவின. அந்த கிசுகிசுவை உண்மையாக்கும் விதமாக 2017ம் ஆண்டு இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். 


அன்பின் அடையாளம் :


இந்தியாவின் மிகவும் பிரபலமான தம்பதிகளாக திகழும் அனுஷ்கா சர்மா - விராட் கோலி ஜோடிக்கு கடந்த 2021ம் ஆண்டு வாமிகா என்ற அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்தது. திருமணம் முடிந்து இத்தனை ஆண்டுகள் கடந்த பின்னர் விராட் கோலியின் லவ் ப்ரபோஸ் குறித்த த்ரோ பேக் மெமரிஸ் பகிர்ந்த வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. 


விராட் அனுஷ்கா ப்ரோபோஸல் பின்னணி :
 
விராட் கோலி தனது நெருங்கிய நண்பரான தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் ஏபி டீ வில்லியர்ஸ் இருவரும் கலந்துரையாடும் வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோவில் விராட் கோலி, அனுஷ்காவுடன் டேட்டிங் செய்தது குறித்து மனம் திறந்து பேசியிருந்தார்.


அவர் பேசுகையில் " நானும் அனுஷ்காவும் பல மாதங்களாக டேட்டிங் செய்து வந்தோம். அந்த சமயத்தில் ஒரு நாள் அனுஷ்காவிற்கு மெசேஜ் ஒன்று அனுப்பினேன். அதில் நான் சிங்கிளாக இருந்தபோது இதை அதை எல்லாம் செய்வேன் என குறிப்பிட்டு இருந்தேன். அதை பார்த்த அனுஷ்கா என்ன சிங்கிளாக இந்த போதா? நீ என்னுடன் டேட்டிங் செய்கிறாய் என்பது எனக்கு தெரியாது என்றாள். நான் ஆல்ரெடி எனது மனதளவில் இதயபூர்வமாக அவளுடன் டேட்டிங் செய்து வருவதாக தான் முடிவு செய்து வைத்து இருந்தேன். அவள் அப்படி சொன்னது கொஞ்சம் அசிங்கமா இருந்தது. ஆனால் அனுஷ்கா உடனே நான் ஒரு டீசென்ட் என எனது காதலை ஏற்றுக் கொண்டாள். அப்படி தான் எங்களை ப்ரபோசல் நடந்தது" என்றார் விராட் கோலி. 


 






 


விராட் கோலியின் இந்த வீடியோ சோசியல் மீடியாவில் மிகவும் வேகமாக பகிரப்பட்டு லைக்ஸ்களை குவித்து வருகிறது. இந்த வீடியோவை திரும்ப திரும்ப பார்க்க வேண்டும் என்ற ஆசை ஏற்படுகிறது. தனது அடி மனதிலிருந்து விராட் சொல்லும் கதைகளை மிகவும் ஸ்வாரஸ்யமாக ரசித்து வருகிறார்கள் அவரது தீவிர ரசிகர்கள்.