மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் கூடுதல் நீதிமன்ற கட்டடங்கள் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டுவிழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில், உச்சநீதிமன்ற தலைமை நீதியரசர் நீதிபதி டி.ஒய். சந்திரசூட் மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் ரூ.166 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள கூடுதல் நீதிமன்ற கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினார். 


இவ்விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் மத்திய சட்டம், நீதித்துறை அமைச்சர் கிரன் ரிஜிஜு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.




இவ்விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, சட்ட நீதியும்,சமூக நீதியும் கிடைத்திட நீதித்துறை அமைப்புகள் வழிவகைசெய்திட வேண்டும்.


தமிழ்நாடு அரசு, இதுவரை நீதித்துறை சார்ந்த பணிகளுக்கு 106 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. 44 புதிய நீதிமன்றம் அமைக்க ஆணைகள் வழங்கப்பட்டு உள்ளது.


உச்சநீதிமன்றத்தில் சமூக நீதியுடன் நீதிபதி நியமம் செய்ய வேண்டும். சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு  மொழியாக அறிவிக்க வேண்டும். உச்ச நீதிமன்ற கிளைகளை சென்னையில் அமைக்க வேண்டும் என மூன்று கோரிக்கைகளை மத்திய அமைச்சகத்திற்கு இந்த கூட்டத்தின் வாயிலாக கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்தார்