இளைஞர்களை வழிநடத்த வேண்டும் என்பதால்தான் இளைஞரான உதயநிதி ஸ்டாலினை விளையாட்டு துறை அமைச்சராக, முதல்வர் ஸ்டாலின் நியமித்திருக்கிறார் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். 


விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள நகராட்சி திடலில் விழுப்புரம் மாவட்டத்திலேயே முதல் முறையாக புத்தக திருவிழாவை அமைச்சர்கள் பொன்முடி மற்றும் செஞ்சி மஸ்தான் இன்று தொடங்கி வைத்தனர்.


இன்று தொடங்கிய புத்தக திருவிழாவானது வருகின்ற 5 ஆம் தேதி வரை நடைபெறுவதால் 100 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. புத்தக திருவிழாவினை தொடங்கி வைத்த அமைச்சர் பொன்முடி அரங்குகளில் வைக்கப்பட்டிருந்த  பெரியார் மற்றும் கலைஞர் கருணாநிதியின் புத்தகங்களைத் தேடி ஆர்வத்துடன் வாங்கிச் சென்றார்.


அதனை தொடர்ந்து புத்தகத் திருவிழாவினைத் தொடங்கி வைத்து அமைச்சர் பொன்முடி பேசியதாவது:


''மாணவர்கள் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை எழுத வேண்டும். அதற்காக பள்ளி பருவத்திலேயே பொது அறிவுத் திறனை, புத்தகம் படித்து வளர்த்துக்கொள்ள வேண்டும். தமிழகத்திலுள்ள மாணவர்கள் ஐ ஏ எஸ் ஐ  பி எஸ் படிப்பவர்களுக்கு 7500 ரூபாய் நிதி உதவி திட்டத்தினை துவக்கி வைத்துள்ளார். 


ஆசிரியர்கள் நூலகத்திற்கு சென்று புத்தகங்களை பயில வேண்டும். அப்போதுதான் மாணவர்கள் நூலகம் செல்ல அவர்கள் அறிவுறுத்துவார்கள். இளைஞரை வழிநடத்த வேண்டும் என்பதால்தான் இளைஞரான உதயநிதி ஸ்டாலினை விளையாட்டு துறை அமைச்சராக ஸ்டாலின் நியமித்திருக்கிறார்.


தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மாணவர்கள் அனைவரும் கல்வி அறிவினை பெற வேண்டும் என்று விரும்பியதால் தமிழகம் முழுவதும் மாவட்டந்தோறும் புத்தக திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. விழுப்புரம், திண்டிவனம், செஞ்சியில் நூலகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும், எங்கு நூலகம் இருக்கிறதோ, இல்லையோ, பள்ளிக்கூடங்களில் நூலகம் இருக்க வேண்டும். 


திராவிட மாடல் ஆட்சி


மத வேறுபாடுகள், ஜாதிய வேறுபாடுகள் இருக்க கூடாது என்பதற்காகத்தான் கோவில்களில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சராக பணியமர்த்தப்பட்டனர்.அவ்வாறு இருப்பதுதான் திராவிட மாடல் ஆட்சி. அதைத்தான் முதலமைச்சர் ஸ்டாலின் செய்துள்ளார். தமிழகத்தில் உயர் கல்வியில் மாணவர் சேர்க்கை சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு 27 சதவீதம் உயர்ந்துள்ளது. தமிழகத்தில் உள்ள மாணவர்கள் ஐஏஎஸ், ஐபிஎஸ் படிப்பவர்களுக்கு 7500 ரூபாய் நிதி உதவி திட்டத்தினைத் துவக்கி வைத்துள்ளோம்.''.


இவ்வாறு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். 


இதையும் வாசிக்கலாம்: 12ஆம் வகுப்பு, 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அனைத்துப் பாடங்களின் மாதிரி வினாத் தாள்களையும் காண: https://tamil.abplive.com/topic/question-bank/amp என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.


TNPSC Group 4 Result: முடிவுக்கு வந்த 8 மாதக் காத்திருப்பு- குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு- பார்ப்பது எப்படி? 


TNPSC Group 4 Result: குவிந்த 18 லட்சம் பேர்; முடங்கிய டிஎன்பிஎஸ்சி இணையதளம்- தேர்வர்கள் அதிர்ச்சி!