பாலிவுட் நடிகையான அனுஷ்கா ஷர்மாவும் , பிரபல கிரிக்கெட் வீரரான விராட் கோலியும் காதலித்து திருமணம் செய்துக்கொண்டனர். இந்த தம்பதிகளுக்கு  ‘வாமிகா’ என்ற பெண் குழந்தை ஒன்றும் உள்ளது. விராட் கோலியும் , அனுஷ்காவும் திருமணத்திற்கு பிறகு தங்களது இலக்குகளில் ஒரு போதும் காம்ப்ரமைஸ் செய்யவே இல்லை. அவர் அவர்களது துறையில் சாதனையாளர்களாகத்தான் இருக்கிறார்கள். அனுஷ்கா ஷர்மாவும் மீண்டும் பாலிவுட்டில் பிஸியாக நடிக்க துவங்கிவிட்டார். அப்படி அவரது நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம்தான்  ‘சக்தா எக்ஸ்பிரஸ்' . இந்த  படத்தை ப்ரோசித் ராய் இயக்குகிறார். படம் முழுக்க முழுக்க பெண்ணை மையமாக வைத்து உருவாகி வருகிறது. படத்தில் பிரபல பெண் கிரிக்கெட் வீராங்கனையான ஜூலன் கோஸ்வாமியாக அனுஷ்கா நடித்து வருகிறார். அதற்காக அவர் எடுக்கும் பயிற்சிகளை கண்ட , விராட் கோலி மனைவியின் கடின உழைப்பை மெச்சி , வெகுவாக பாராட்டியிருக்கிறார்.







அனுஷ்காவை புகழ்ந்த விராட் கோலி :



இந்திய கிரிக்கெட் வீரர் விராட் , தனது மனைவி சக்தா எக்ஸ்பிரஸ் படத்திற்காக கொடுக்கும் கடின உழைப்பை கண்டு , அவர் மீது மரியாதை அதிகரித்துவிட்டதாக தெரிவித்துள்ளார். "என்னைப் பொறுத்தவரை, ஒரு திரைப்படம் மூன்று மணி நேரம். அதை பார்த்தால் அவ்வளவுதான் என இருந்தேன். ஆனால் அனுஷ்கா இந்த படத்திற்காக எடுக்கும் பயிற்சிகளை பார்க்கும் பொழுது , அவர் மீது மரியாதை அதிகரித்துவிட்டது. அவர் தனக்கான சவாலை தேடிக்கொண்டே இருக்கிறார். அவர் பந்து வீச்சை முதல் முறையாக கற்றுக்கொள்கிறார். “ என்றார் விராட் கோலி.







தனிப்பட்ட வாழ்க்கையாக இருந்தாலும் சரி , கெரியர் தொடர்பான அறிவிப்பாக இருந்தாலும் சரி அனுஷ்கா ஷர்மா அவ்வபோது தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார். ஆனாலும் விராட் கோலியும் அனுஷ்கா ஷர்மாவும் சமூக வலைத்தளங்களில் படு ஆக்டிவ் என சொல்ல முடியாது. அனுஷ்கா ஷர்மா தற்போது சக்தா எக்ஸ்பிரஸ் படப்பிடிப்பிற்கா லண்டனில் முகாமிட்டுள்ளார். அனுஷ்கா ஷர்மா  இறுதியாக கடந்த 2018  ஆம் ஆண்டு ஆனந்த் எல் ராய்  இயக்கிய திரைப்படமான ஜீரோவில் ஷாருக்கான் மற்றும் கத்ரீனா கைஃப்புடன் நடித்திருந்தார். அதன் பிறகு வாமிகா பிறந்ததால் தொடர்ந்து நடிக்க முடியவில்லை. தற்போது சக்தா எக்ஸ்பிரஸ் மூலம் சினிமா எக்ஸ்பிரஸை துவங்கியிருக்கிறார் அனுஷ்கா. படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.