ஸ்விகி நிறுவனம் புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தியதை தொடர்ந்து, நேற்று முன் தினம் முதல் ஸ்விகி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் மூலம் ஆன்லைன் உணவு விநியோக சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், தலைநகர் சென்னையில் உள்ள பல உணவகங்கள் ஸ்விகி செயலி தற்காலிகமாக மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய விதிமுறைகள்:
ஸ்விகி நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வாரம் ஒருமுறை ஊக்கத்தொகை வழங்கப்படும். தற்போது கொண்டு வந்த புதிய விதிமுறையின்படி, வாரம் ஒருமுறை வழங்கப்படும் ஊக்கத்தொகை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வேலை 12 மணி நேரத்திலிருந்து 16 மணி நேரம் வரை அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே இருந்த வேலை நேரத்தின் படி, ஸ்விகி ஊழியர்கள் 12 மணி நேரம் வேலை பார்த்தால் வாரம் சம்பளமாக 14,500 கிடைக்கும். தற்போது 16 மணி நேரம் வேலை பார்த்தாலும் வாரம் ரூ. 12,000 வரை மட்டுமே கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அத்துடன் வாரவாரம் கிடைக்கும் ஊக்கத்தொகை நிறுத்தப்படுவதால், பெட்ரோல், உணவு உள்பட முக்கிய செலவுகள் போக 7 ஆயிரம் மட்டுமே இந்த புதிய விதிமுறையின்படி கிடைக்கும் என்றும் தெரிவித்தனர்.
தொடர்ந்து, புதிய விதிமுறைகளின்படி, வேலை பார்த்தால் குறிப்பிட்ட அளவு மட்டுமே சம்பளம் பெற்று தங்களது வாழ்வாதாரம் பாதிக்கும். எனவே பழைய நடைமுறையின்படி ஊக்கத்தொகை மற்றும் சம்பளம் வழங்க வேண்டுமென ஸ்விகி ஊழியர்கள் மூன்றாவது நாளாக தலைநகர் சென்னையில் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இதையடுத்து பலரும் சமூக வலைத்தளமான ட்விட்டரில் ஸ்விகி ஊழியர்கள் ஆதரவாக பதிவிட்டு வருகின்றனர்.